உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/319

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

294

மறைமலையம் - 10

ஓதற் கெளிதாய் உணர்தற் கரிதாகி

வேதப் பொருளாய் மிகவிளங்கித்-தீ தற்றோர்

உள்ளுதொ றுள்ளுதொ றுள்ளம் உருக்குமே

வள்ளுவர் வாய்மொழி மாண்பு.

-மாங்குடி மருதனார்

எல்லாப் பொருளும் இதன்பால் உளதிதன்பால்

இல்லாத எப்பொருளும் இல்லையால் - சொல்லால்

பரந்தபா வால்என் பயன்வள் ளுவனார்

சுரந்தபா வையத் துணை.

அறந்தகளி ஆன்ற பொருள்திரி இன்பு

சிறந்த நெய் செஞ்சொல்தீத் தண்டு - குறும்பாவா வள்ளுவனார் ஏற்றினார் வையத்து வாழ்வார்கள் உள்ளிருள் நீக்கும் விளக்கு

மதுரைத் தமிழ்நாகனார்

பொய்ப்பால பொய்யேயாய்ப் போயினபொய் அல்லாத மெய்ப்பால மெய்யாய் விளங்கினவே - முப்பாலின் தெய்வத் திருவள் ளுவர்செப் பியகுறளால் வையத்து வாழ்வார் மனத்து.

அறனறிந்தேம் ஆன்ற பொருளறிந்தேம் இன்பின் திறனறிந்தேம் வீடு தெளிந்தேம் - மறனெறிந்த வாளார் நெடுமாற வள்ளுவனார் தம் வாயால் கேளா தனவெல்லாம் கேட்டு.

- நப்பாலத்தனார்

- தேனீக்குடிக் கீரனார்

- கொடிஞாழல் மாணி பூதனார்

சிந்தைக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய வந்த இருவினைக்கு மாமருந்து -முந்திய நன்னெறி நாமறிய நாப்புலமை வள்ளுவனார் பன்னிய இன்குறள்வெண் பா.

கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக் குறுகத் தறித்த குறள்.

அணுவைத் துளைத்தேழ் கடலைப் புகட்டிக்

குறுகத் தறித்த குறள்.

கவுணியார்

- இடைக்காடர்

- ஔவையார்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/319&oldid=1579945" இலிருந்து மீள்விக்கப்பட்டது