உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

2. தமிழ் மக்களின் பண்டை நாகரிகம்

6

ங்ஙனமாக நந்தமிழ் மக்களின் முன்னோர்கள் ஏனைப் பண்டை நாகரிக மக்கள் எல்லாரையும்விட அறிவு முயற்சி யிலுந்த தொழின் முயற்சியிலுந் தலைசிறந்து விளங்கின பான்மை, அவர் தம்மில் நல்லிசைப் புலவராய்த் திகழ்ந்த மேன்மக்கள் இயற்றிய பழைய நூல்களாலுஞ் செய்யுட் களாலும் நன்கு தெளியப்படுதலுடன், அவர்தம் வரலாறுகளை நடுநின் றாராய்ந்து நூல்களை எழுதிய ஆங்கில ஆசிரியரின் உரைகளாலும், நடுவின்றி யாராய்ந்து நூல்கள் வரைந்த நம் இந்திய ஆசிரியர்கள் உரைகளாலுங்கூடத் தெற்றெனப் புலனாகின்றன. கால்ட்வெல் (Caldwell) ஆசிரியர் இற்றைக்கு அரை நூற்றாண்டிற்கு முன்னரே செய்த அரிய பெரிய சால்லாராய்ச்சி சொற்பொருளாராய்ச்சியின் முடிபாகப், "பண்டைத் திராவிடர்கள் எந்தவகையிலும் நாகரிகமில்லாக் கீழ்மக்களாகக் காணப்படவில்லை. கானக வாழ்க்கையிலிருந்த மக்களின் நிலை எத்தகையதாயிருப்பினுந், திராவிடர்கள் என்னும் பெயர்க்கு உண்மையில் உரியோர், தம்மிடையே பார்ப்பனர்கள் வந்து சேர்தற்கு முன்னமே, எவ்வளவு குறைந்த படியாய்ப் பார்த்தாலும் நாகரிகத்திற்கு மூலமானவை யெல்லாம் பெற்றிருந்தன ரென்பதில் ஐயுறுதல் ஏலாது, என்று வலியுறுத்திக் கூறினார். இவ்வாசிரியர் பழைய ஈபுருமொழி விவிலிய நூலிற் புகுந்த “தோகை, அகில்” முதலான தமிழ்ச் சொற்களை எடுத்துக்காட்ட, அவற்றைக் கண்டு தமிழின் பழமை யுணர்ந்து வியந்த வடமொழிப் பேராசிரியரான மாக்ஸ்மூலர் (Max Muller) “இச் சொல்லாராய்ச்சி உண்மை யாகுமானால், ஆ ரியக்குடியினர் இவ்விந்திய நாட்டுப்புகு நாட்டுப்புகு முன்னரே, தமிழ்மொழிகள் வழங்கிய பழமையினை உறுதிப் படுத்துதற்கு அது சிறந்ததொரு கருவியாகும்”2 என்று உண்மையுரை

99 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/37&oldid=1579659" இலிருந்து மீள்விக்கப்பட்டது