உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

13

புகன்றார். இன்னும், இப்போது கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் வடமொழிப் புலமை நடாத்தும் ராப்சன் (Rapson) என்னும் ஆசிரியர், பண்டை ஆரிய மக்கள் இவ்விந்திய நாட்டிற் குடிபுகுந்து பரவிய வரலாற்றினை ஆராய்ந்துரைக்கின்றுழி, ப் பரவுதலானது, சமஸ்கிருதமும் அதிற் றோன்றிய மொழிகளும் எவ்விடத்தும் பரவிய அடையாளத்தைக் காட்டு கின்றது. ஆனாலுந், தென்னிந்தியாவிலேதான் அவர் அங்ஙனம் பரவுதல் தடுப்புண்டது; ஏனென்றால், தென்னாட்டிலே ஆரிய நாகரிகத்தினும் பழையவாகிய திராவிட நாகரிகமுந் திராவிட மொழிகளும் இன்றுகாறும் நிலைபெற்றுத் தலைசிறந்து தோன்றுகின்றன. என்றும், “எவ்வாற்றானுந் திராவிட நாகரிகமானது, ஆரியர் வருவதற்கு முன்னரே இந்திய நாட்டில் முதன்மையுற்றிருந்தது. திராவிட மக்களிற் பலர் தமக்கு உரியவல்லா ஆரியமொழிகளையும் பிறமொழிகளையும் இப்போது பேசுகின்றனர்" என்றும், “திராவிடர்கள் ஆரிய நாகரிகத்தினையும் ஆரிய மதத்தினையும் பெரிதுந் தம் வழிப்படுத்தி உருவாக்கினர்” என்றும் மெய்யுரை பகர்ந்தார். இன்னும், சில்லாண்டுகளுக்குமுன் சென்னைப் பல்கலைக் கழகத்திற் பொருணூல் ஆசிரியராய் அமர்ந்து, நம் இந்து மக்களின் வரலாறுகளையெல்லாம் நேரே பலமுகத்தான் ஆராய்ந்து உண்மைகண்டு ஓர் அரிய நூல் ஆங்கிலத்தில் எழுதிய ஸ்லேட்டர் (Slater) என்பார் ஆரிய திராவிட நாகரிகத்தைப் பற்றிக் கூறவந்துழி, “ஆரியர்கள், உழவுத் தொழிலை முற்றுமே அறியாதவர்கள் அல்லராயினும், அவர்கள் இடம் விட்டுப் பெயர்ந்து செல்லும் இடையர் வாழ்க்கையிலேயே முதன்மையாய் இருந்தவர்களென்பது ஐயமின்றி எல்லாரும் ஒப்புக்கொண்டதாகும்; ஆனால், திராவிடர்களோ நாம் அறிந்த மட்டில் ஆரியர்களினும் ம் மிக்குயர்ந்த நாகரிக நிலையில் இருந்தவர் ஆவர்,” என்று முடிபு சால்லி, அதற்கு அகச்சான்றாக ஆரியமொழியிலுள்ள இருக்குவேதத்திற் பண்டை ஆரியர், தமிழ்மக்களைக் குறிப்பிட்டுச் சொல்லும், உரைகளாகிய,

“இந்திரன் திவோதாசன் பொருட்டாகச் சம்பரனுடைய நூறுகோட்டைகளையுந் தகர்த்தெறிந்தான்”

2

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/38&oldid=1579660" இலிருந்து மீள்விக்கப்பட்டது