உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

66

மறைமலையம் 10

'இடியேற்றினைச் சுழற்றுவோனான இந்திரனே! நீ புரு குத்ஸன் பக்கத்தினின்று போரியற்றுங்கால் ஏழு நகரங்களை அழித்தொழித்தனை! சுதாசனுக்காக அங்கனுடைய செல்வத்தைத் தொலைத்தனை! ஆரியமகனுக்கு உதவியாய் நீ பிப்ருவின் நகரங்களை உடைத்தெறிந்தனை! தஸ்யுக்களுடன் செய்த சண்டையில் ரிஜிஸ்வானைப் பாதுகாத்தனை!” நீ சுஷ்ணனது செல்வத்தை ஆண்மையுடன் துடைத்து விட்டனை; அவனுடைய கோட்டைகளையுந் தகர்த்து விட்டனை

என்பவைகளையும் எடுத்துக்காட்டிக்,

கோட்டைகளும் நகரங்களுஞ் செல்வச் செழுமையும் நாகரிக மேம்பாட்டினைக் குறித்தற்குப் போதுமானவை களாகும். மேலுந், திராவிட அசுரர்கள் செல்வவளமும், மந்திர ஆற்றலும், விழுமிய கட்டிடங்கள் அமைக்குந் திறமும், இறந்தவரை எழுப்பும் வன்மையும் பெற்றிருந்தனரென ஸமஸ்கிருத நூல்கள் நுவலுதலை ஒல்ட்ஹாம் என்பவரும் எடுத்துரைத்தனர்” என்றும் மொழிந்தனர்.

1

மேற்காட்டிய மேனாட்டாசிரியர் நால்வரும் ஆரியர் திராவிடர்களின் வரலாறுகளை அகச்சான்று புறச்சான்று களான் ஆழ்ந்தாராய்ந்து, திராவிடநாகரிகமே ஆரியநாகரிகத் தினுஞ் சிறந்ததும் முற்பட்டதும் ஆகும் என நடுநின்று முடித்துக் கூறினமை நினைவிற் பதிக்கற்பாற்று.

இனி, நம் இந்திய ஆசிரியரில் தமிழர் ஆரியர் நாகரிக வரலாற்றினை ஆராய்ந்தார் சிலர், தமிழரது நாகரிகம் பழமையானதுஞ் சிறந்ததும் மேனாட்டவர் நாகரிகத்திற்குத் தாயகமாவதுமாமெனக் கிளந்தனரேனும், முடித்துக் கூறுங்கால் அதுதானும் ஆரிய நாகரிகத்தினின்றே பிறந்ததென நடுவின்றியுங் கூறினார். அச் சிலருள், இருக்கு வேதத்தை ஆராய்ந்து இரண்டு விரிந்த நூல்கள் ஆக்கிய வங்காள அறிஞரான ‘அபிநாஸ் சந்திரதாஸ்' என்பார் பின்வருமாறு கூறுகின்றார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/39&oldid=1579661" இலிருந்து மீள்விக்கப்பட்டது