உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

L

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

15

சாலடி நாட்டில் தெல்லோகம் என்னும் ஊரிற் டடுக்கப்பட்ட கற்பாவைகளினின்றும் பிரித்தெடுக்கப் பட்ட தலைகளின் அமைப்புந்தென்னாட்டிலுள்ள தமிழர்களின் முக அமைப்பும் வியக்கத்தக்கபடியாய்ப் பெரிது ஒத்திருத்த லாலுஞ் சுமேரியர் வழங்கிய மொழி திராவிட மொழிகளைப் போலவே பகுபத வுறுப்புகள் வாய்ந்திருத்தலாலுஞ், சோழர் களைப்போலவே சாலடியர்களும் உழவுத் தொழிலிற் சிறந்தவர்களாயுங் கால்வாய்கள் அமைப்பனராயும் இருந்தமை யாலுஞ் சோழர்களைப்போலவே அவர்கள் கடன்மேற்

ம்

டையே

செல்பவர்களாயும் வணிகர்களாயும் விளங்கினமையாலுஞ், சோழர்கள் தாமும் மரக்கலக்கலையையும் வாணிகமுறையையும் பணிகரிடமிருந்து கற்றே கடன்மேற் செலவிலும் ஏனையெல்லாத் துறைகளிலும் அவர்களை யொப்ப நடந்தமையாலும், ஆசியாப் பெருந்தேயத்தின் மேற்கிலுந் தெற்கிலுமுள்ள எல்லா நாடு களிலுந் தென்னிந்தியக் கடற்கரை மருங்குள்ள நாடுகளுக்கும் பாரசிகக்குடாக் கடலோரமாயுள்ள நாடுகளுக்கும் இடை தான் பண்டை நாள் வாணிகம் நடைபெற்று வந்தமையாலும், ஆசியாவின் தென்பகுதியிலாதல் ஆப்பிரிக்காவின் கீழ்ப்பகுதி யிலாதல்,இந்தியர்களைப்போற் சென்று பாரசிகக் குடாக்கடற் கரை மருங்கிற் குடியேறிய அத்துணை உயர்ந்த நாகரிகமுடைய வர்கள் பிறர் இல்லாமையாலுஞ், சுமேரியர் என்பார் ஆரிய திராவிடக் கலவையிற் றோன்றியவர்களே யென்பது மறுக்க முடியாத உண்மையாம். இன்னும், பாபிலோனியர் அசீரியர் என்பாரின் உலகியல் நாகரிகமேயன்றிச் சமயக் கோட்பாடும், ஆரிய நாகரிக சமயக்கோட்பாட்டையுந் திராவிட நாகரிக சமயக் கோட்பாட்டையும் பின்பற்றியவை களேயாகும்”' என்பது.

இம் மேற்கோளுரையில், திராவிடநாகரிகமே, மிகப் பழைய காலத்தில் நாகரிகத்தாற் சிறந்து விளங்கிய மேனாட்டவர் நாகரிகத்திற்கெல்லாம் அடிப்படையாய் நிற்கும் உண்மையை மறைத்தல் ஏலாமையின் அதனை விண்டுசொல்லிய நம் அபிநாஸ் சந்திரதாஸர்' அவ்வளவிலமையாது, தாம் ஏற்றஞ்சொல்ல விழைந்த ஆரிய நாகரிகத்தினையுந் திராவிட நாகரிகத்துடன் கொணர்ந்து ஒட்டவைக்கும் விரகினையுங் காண்மின்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/40&oldid=1579662" இலிருந்து மீள்விக்கப்பட்டது