உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

மறைமலையம் -10

அதுமட்டுமோ! சுமேரியர் முதலான மேனாட்டு நாகரிக மக்கள் அனைவர்க்கும் நாகரிக வாழ்க்கையினைக் கற்பித்தவர்கள், ஆரியர்க்குப் பன்னெடுங்காலம் முன்னே நாகரிகத்திற் சிறந் தோங்கிய தமிழர்களே யெனப் பலவலிய சான்றுகளான் நிலைநாட்டிய ஹால் என்னும் ஆங்கில ஆசிரியரையும் இராகொசின் என்னும் ஐரோப்பிய ஆசிரியரையும் மறுப்பான் புகுந்து, அதற்குத் தக்க வலியசான்றுகள் காட்டமாட்டாது ஆரியரது நாகரிகமே திராவிடரது கலைப்பயிற்சிமேல் அழியாத தனது இலச்சினையைப் பொறித்தது. அதுவேதிராவிட மக்களை, முதன்மையாய்ச் சோழ பாண்டியர்களை மேலுயர்த்தியது. பின்னர்ச் சோழ பாண்டியர்கள் சீர்திருத்தப்பட்ட தமது நாகரிக வாழ்க்கையினைப் பாபிலோனிய நாட்டுக்கும் எகுபதி நாட்டுக்குங் கொண்டுபோயினர்”2 என்று தாம் பிடித்த பிடியை விடாமற் கிளந்தார்.

66

பண்டைத் தமிழர்களே முதன்முதல் நாகரிகத்திற் சிறந்தவராய், ஏனைப் பழைய மக்கட்கெல்லாம் நாகரிகத்தைக் கற்பித்தவராய் இருக்கும் உண்மை வலிய சான்றுகளால் நிலைபெறுதல் கண்டு மனம்பொறாமல், அவரை ஆரியர்பால் நாகரிகங் கற்றவரென்று சால்லி அவ்வெண்ணத்தை எப்படியாவது உண் உண்டாக்கிவிட்டால், ால், அவ் வண்ணம் ஆராய்ச்சியில்லார்பால் எங்கும் பரவி, ஆரிய நாகரிகமே உலக நாகரிகத்திற்குக் காரணமாயிற்று என்னும் ஒரு போலிக் கொள்கை பரவிய வழக்காகிவிடுமெனக் கருதிப் போலும் மேற்குறிப்பிட்ட வங்காள அறிஞர் அங்ஙனம் வலிய சான்றுகட்கெல்லாம் மாறுபேசினார்! அற்றேல், அவர் தமது கூற்றுக்குச் சான்று ஏதுமே காட்டிற்றிலரோ வெனின்; நீரில் அமிழ்ந்துவோன் ஒருவன் தன் அருகு மிதந்துசெல்லும் ஒரு வைக்கோற்றுரும்பினைக் கைப் பற்றியவாறுபோல, அவ்வங்காள அறிஞருந் தாம் விழைந்ததனை நாட்டுதற்பொருட்டு, இருக்கு வேதத்திற் சொல்லப்பட்ட ‘பணிகர்' என்னும் ஆரிய வணிக வகுப்பினரே சோழ பாண்டியர்க்குக் கடன்மேற் செல்லும் வாணிக வாழ்க்கையினைக் கற்பித்தனர் எனவும், அவ் விருக்கு வேதத்திற் காணப்பட்ட ‘மனா என்னும் எடைப்பெயர் ஆரியமொழிச் சொல்லாதலின் அதனை வழங்கிய திராவிடரும் பாபிலோனியரும் பணிகரென்னும் ஆரிய வணிகரிடமிருந்தே அதனைக் கற்றனரெனவுங் கூறினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/41&oldid=1579663" இலிருந்து மீள்விக்கப்பட்டது