உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

3. பணிகர் ஆரியர் அல்லர், தமிழரே

அபிநாஸ் சந்திரதாசர் சிறிதாயினும் நமது தமிழ் மொழியினைக் கற்றிருந்தனராயின் இங்ஙனம் எல்லாம் உண்மைக்கு முழுமாறானவைகளைக் கூறி இழுக்குற மனந் துணியார்! அவர் அது கல்லாமையினாலும், ஆரியர்க்கே ஏற்றஞ் சொல்லவேண்டுமென்னும் பற்றுள்ளத்தினாலும் பெரிதும் பிழைபடக் கூறினார். மேலும், பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்கு இருக்கு வேதத்தில் ஒரு தினையளவு சான்று தானும் இல்லை. மற்று, அப் பணிகர் என்னும் வணிகக்கூட்டத்தார் ஆங்கீரசர் என்னும் ஆரிய இனத்தார்க்கு முற்றும் பகையானவரென்றும், அக்குழுவிலுள்ளார் அனைவருங் குவியல் குவியலாகப் பொன்னும் எருதுகளும் ஆக்களுங் குதிரைகளும் உடையவர்களா யிருந்தனரென்றும், பணிகர் தமது மலைமுழைஞ்சிலே தொகுத்து வைத்திருந்த சிறந்த செல்வத்தை ஆரிய ஆங்கீரசர் சுற்றிச் சுற்றித் திரிந்து பெரிது முயன்று தேடிக் கவர்ந்து கொண்டனரென்றும், பேரவாவுடைய பணிகர் ஒநாய்களாதலின் அவர்களை அழித்து டுகவென ஆரியர்கள் விசுவதேவர்களை வேண்டினரென்றும் ருக்கு வேதம் (1, 83, 24, 6, 61, 14) நன்கெடுத்துக் கூறக் காண்டலிற், பணிகர் என்பார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லரென்பது உள்ளங்கை நெல்லிக்கனிபோல் விளங்கற்பாலதாகும். மேலும், ஆரியர்கள் தாம் உவந்து வழிபடும் பெருந்தெய்வமான இந்திரனை வேண்டும் இருக்குவேத ஆறாம் மண்டிலத்து முப்பத்துநான்காம் பதிகத்தில் (6-34-2) அவ் விந்திரன் பணிகரைத் தன் அம்பினாற் றுளைத்து அவர்களது பொருளைக் கொள்ளை கொண்டமையும் நுவலப்பட்டிருக் கின்றது. இன்னும் இங்ஙனமே பணிகரைப் பற்றிச் சொல்லும் டங்களிலெல்லாம் அவர்கள் ஆரியர்க்குப் பகையானவ

L

னிது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/42&oldid=1579664" இலிருந்து மீள்விக்கப்பட்டது