உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

மறைமலையம் 10

ஒர்

ரென்றே இருக்குவேத வுரைகள் நுவலக் காண்டுமின்றி, அவர்கள் ஆரியவினத்தைக் சேர்ந்தவர்களென்று எட்டுணையேனும் அவை கூறக் காண்கின்றிலேம். உண்மை இவ்வாறிருக்கப், பணிகர் ஆரிய வினத்தவரென்றும், அவரே தமது ஆரிய நாகரிகத்தைத் தமிழர்க்குங் கற்பித்தவ ரென்றும் அபிநாஸ் சந்திரதாசர் அதனை முழுதும் புரட்டிக்கூறியது மிகவும் வருந்தற்பாலதா யிருக்கின்றது.பற்றுள்ளம் உடையார் எத்துணைச் சிறந்த அறிவுடையராயினும், அவர் தமக்கு ஆகாத உண்மையினைக் கிளவாது புரட்டிவிடுவ ரென்பதற்கு இவ் வங்காள நண்பர் சான்றாய் நிற்றல் காண்மின்கள்!

இனிப், பணிகர் என்பார் ஆரியரல்லராயின் அவர் வேறு எந்த இனத்தைச் சேர்ந்தவரென்பது சிறிது ஆராயற்பாற்று. பணிகரென்பார் வாணிக வாழ்க்கையிற் சிறந்தவர்களென்றும், அவர்கள் காலினுங் கலத்தினுஞ் சென்று பெருந்திரளான அரும்பொருள் ஈட்டியவர்களென்றும் அவர்கள் மேனாடுகளிற் சென்று குடியேறி அங்கிருந்த மக்களையெல்லாம் நாகரிகம் அடையச் செய்தனரென்றும், அங்ஙனம் மேனாடுகளிற் சென்று வைகிய பணிகரே பின்னர்ப் ‘பீனிசியர்’ என வழங்கப் பட்டனரென்றும், இவர்கள் கடல்கொண்டொழிந்த குமரி நாட்டிலிருந்து மேனாடுகளுக்குச் சென்றமையாலுங் குமரிநாடு குசத்தீவு’ எனப் பழைய ய புராணங்களிற் சொல்லப் பட்டமையாலும் இவர்கள் ‘குசமக்கள்' என ஆரியரால் அழைக்கப்பட்டன ரென்றும், இற்றைக்கு ஐயாயிர ஆண்டு களின்முன் அமைக்கப்பட்டு இப்போது தென் பாபிலோனி யத்தின் கண்ணதான தெல்லோகத்திற் கண்டெடுக்கப்பட்ட கற்பாவைகளின் தலைகள் இஞ்ஞான்றை நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களின் முகமுந் தலையும் போற் செவ்வையாக மழிக்கப்பட்ட வடிவுடன் காணப்படுதலின் அவைகள் பண்டை வணிக மக்களான பணிகரின் வடிவத்தையே குறிக்கின்றன வென்றும் அபிநாஸ் சந்திரதாசரும் அவர் தழுவி யெடுத்துக் காட்டிய ஐரோப்பிய ஆசிரியர்களும் ஒருப்பட்டு உரைக்கின்றனர்! ஆரியப்பற்றின்றித் திராவிட நாகரிகத்தின் உண்மைகளை உள்ளவாறு ஆழ்ந்தாராய்ந் துரைக்கும் வழியெல்லாம் அபிநாஸ் சந்திரதாசரின் ஆராய்ச்சி யுரைகள் பெரிதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/43&oldid=1579665" இலிருந்து மீள்விக்கப்பட்டது