உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

19

பாராட்டற் பாலனவா யிருத்தலையும் நம்மனோர் கருத்திற் பதித்தல் வேண்டும்.

இவ்வாறாகப் பல முகத்தானும் நன்காராய்ந்து காணுங் காற்பணிகர் எனபார் ஆரிய இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்லாமை திண்ணமாய்ப் பெறப்படுவதுடன், அவர்கள் தென்னாட்டின் கட் பண்டைநாட் டொட்டு வாணிக வாழ்க்கையிற் சிறந்து வாழ்ந்து வரும் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்களாகிய தூய தனித் தமிழ்மக்களே யாதலுந் தெளியப்படும். இவர்கள் இருக்குவேதப் பதிகங்கள் இசைக்கப்பட்ட மிகப் பழைய காலத்தே ‘பணிகர்’ என்னுந் தூய தனித்தமிழ்ப் பெயரால் வழங்கப்பட்டதூஉம் இதற்கொரு பெரு வலிய சான்றாகும். அற்றேற், பணிகர் என்பது தூய தமிழ்ச் சொல்லாதல் காட்டுக வெனிற், காட்டுதும். பணிகர் என்பது பண் என்னும் முதனிலையிற் பிறந்தது; பண்ணல் ஆவது ஒரு தொழிலைச் செய்தல்; பணி என்பது ஒரு தொழிலை யுணர்த்தும்; இங்கே கொண்டுவிற்றலாகிய தொழிலே பணியென விதந்து வழங்கப் பட்டது. இஞ்ஞான்றுங் கொண்டுவிற்றல் செய்வாரைத் 'தொழில் செய்வார்' எனக் கூறுப. ஆகவே, பண்டைநாளிற் கொண்டு விற்றலாகிய பணி செய்வார் ‘பணிகர்' என வழங்கப் பட்டனர். பணிகர் என்னும் பழைய தமிழ்ச்சொல்லே பின்னர் வணிகர் எனத் திரிந்தது. இங்ஙனஞ் சில தமிழ்க் சொற்களிற் பகரவெழுத்து வகரவெழுத்தாக மாறி நடத்தல், பகுப்பு என்பது வகுப்பு எனவும், பன்றி யென்பது வன்றி யெனவுந் திரிந்து வழங்குதலில் வைத்துக் கண்டு கொள்ளப்படும். இனி, வணிகர் நடத்துந் தொழிலே வாணிகம் என வழங்கப்பட்டு வருகின்றது. இவ்வாற்றால், இருக்குவேதத்திற் பண்டைத் தமிழ் வணிகர்க்குப் பெயராக வழங்கப்பட்ட ‘பணிகர்' என்னுஞ் சொல் தூய தனித்தமிழ்ச் சொல்லேயாதல் கடைப்பிடித்துணர்ந்து கொள்ளல் வேண்டும். இது தமிழ்ச் சொல்லாதல் தெரிந்தனராயின், அபிநாஸ் சந்திரதாசர், அகச்சான்று புறச்சான்றுகட்கெல்லாம் முழுமாறாகப் பணிகரை ஆரியவினத்திற் சேர்ந்தவராகக் கருதி, அவ்வாரியராற் பண்டைத் தமிழரும், அப் பண்டைத் தமிழராற்

L

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/44&oldid=1579666" இலிருந்து மீள்விக்கப்பட்டது