உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20

மறைமலையம் 10

பிற நாடுகளிலுள்ளாரும் நாகரிகம் பெற்றனரெனப் பிழைபடக் கூறியிரார். இவ்வொரு சொல்லின் உண்மை யறியாமையின் எவ்வளவு பெரும்பிழை நேர்ந்துவிட்டது பார்மின்கள்!

1

இனிப், பணிகர் வழங்கிய ‘மனா' என்னும் நிறுத்த லளவைச் சொல், இருக்குவேத எட்டாம் மண்டிலத்து அறுபத்தேழாம் பதிகத்திற் (8-67-2) குறிப்பிடப்பட்டிருத்தல் கொண்டு அதனைத் தாசர் ஆரியமொழிச் சொல்லென்றதூஉம் பொருந்தாவுரையாம். இவர்க்கு முன்னரே இச்சொல்லை யாராய்ந்த ஆசிரியர் மாக்ஸ்மூலர், இச் சொல் இருக்கு வேதத்தில் இவ்வோரிடத்தே தவிர வேறு எங்குங் காணப்படவில்லை யென்றும், வடமொழியிலுள்ள வேறெந்த நூலிலுங்கூடக் காணப்படாத இஃது இலத்தீன் கிரேக்கம் பினீசியம் முதலான மொழிகளிலெல்லாம் ஒரு நிறையளவுப் பெயராகவே வழங்கப்படுகின்றதென்றுங் கூறினாரேனும், இவ்வொரு சொல்லை மட்டும் ஆரிய மொழிப் புலவர் பாபிலோனி யரிடமிருந்து பெற்று வழங்கினாரென்றல் இசையாதென்றும் மொழிந்தனர். ஆனால், இராகொசின் என்னும் ஆசிரியரோ, இச்சொல் பழைய சாலடி நாட்டிலும் பாபிலோனிய நாட்டிலும் பண்டை நாளில் வழங்கப் பின்னர்க் கிரேக்க மொழியிற் புகுந்து அதன்பின் இலத்தீன் மொழியிலும் வழங்கலாயிற்றெனவுங், தென்றமிழ் நாட்டின் மலை நாட்டோரத்திலன்றி இந்தியாவில் வேறெங்கும் வளராத தேக்குமரத்தின் துண்டம் ஒன்று இற்றைக்கு ஐயாயிர ஆண்டுகளுக்குமுன் சாலடிநாட்டில் ‘ஊர்’ என்னும் இடத்தில் எடுப்பிக்கப்பட்ட கட்டிடத்தின்கணிருந்து கண்டெடுக்கப்பட்டமையாலும், பண்டைப் பாபிலோனியர்

பிறநாடுகளிலிருந்து தம்மூர்க்குக் கடல்வழியே வந்த பண்டங்களைக் குறிக்கும் பெயர்கள் பெரும்பாலுந் தமிழ்ச் சொற்களாகவே யிருத்தலால் அப் பண்டங்களை மரக்கலங் களில் ஏற்றுவித்துவிட்ட துறைமுகமுந் தமிழ்நாட்டின் கண்ணதாகவே யிருத்தல்வேண்டுமாகையாலும், பண்டைத் தமிழ் மக்களைத் தவிரப் பிறரெவருங் கடல்வழியே மரக்கலம் ஊர்ந்துபோந்து மேனாடுகளில் வாணிகஞ் செய்வதில்லாமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/45&oldid=1579667" இலிருந்து மீள்விக்கப்பட்டது