உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

21

யாலும், மனா என்னுஞ் சொல் தமிழ்ச் சொல்லாகவே இருத்தல் வேண்டுமெனக் கருதினார்?. இவ்வாசிரியர் கருதிக் கண்டமுடிபே உண்மை முடிபாகும். மனா என்னுஞ் சொல், மாக்ஸ்மூலர் மொழிந்தவாறு பாபிலோனியரிடமிருந்து ஆரியர் எடுத்த தொன்றாதல் இசையாது; ஏனென்றால், ஆரியர்க்கும் பாபி லோனியர்க்கும் இடையே அஞ்ஞான்று வாணிகம் நடந்ததே யில்லை. மேலும், அவ் விருவரும் எட்டாத்தொலைவிலுள்ள நாடுகளில் இருந்தவர் ஆனாற், பணிகர் என்னுந் தமிழ்மக்களோ, அப் பழைய நாளில் இவ்விந்திய நாட்டகத்தே ஆரியர் வருதற்கு முன்னரே செழுமையாயிருந்து, விருந்துவந்த ஆரியரின் நல்லாரை வரவேற்று அவர்க்கு வேண்டும் உதவிக ளல்லாஞ்

செய்து, ஒரோவொருகால் அவ்வாரியராற் புகழ்ந்தேத்தப் பட்டவர்களாவரென்பது, இருக்குவேத ஆறாம் மண்டிலத்து நாற்பத்தைந்தாம் பதிகத்தால் (6-45-1) நன்கு விளங்கா நிற்கின்றது. ஆகவே, மனா என்னுஞ் சொல்லை, ஆரியர்கள், இராகொசின் ஆசிரியர் கருதியவாறு, தம்மை விருந்தோம்பித் தமக்குப் பொற்றிரள் வழங்கிய பணிகராகிய தமிழ்வணிக ரிடமிருந்தே பெற்று வழங்கினாரென்பது சிறிதும் ஐயுறவின்றித் துணியற்

பாலதாயிருக்கின்றது.

நன்று, அங்ஙனம் மனா என்பது தமிழ்ச்சொல்லாயின், அது தமிழ்வழக்கிற் காணப்படுதல் வேண்டுமாலெனின்; வேண்டும்; தமிழ்மக்கள் அல்லாதார் வாயில் மனஃ, ம்னா, மின, மனா எனச் சிதைந்து தோன்றிய சொல்லே, தனித் தமிழ் மக்கள் வாயில் மணங்கு எனத் திருத்தமாகத் தோன்றி இன்றுகாறும் வழங்கிவரா நிற்கின்றது.எட்டு வீசை கொண்டதோர் எடையை மணங்கு என இஞ்ஞான்றைத் தமிழ் வணிகர் மிகுதியாய் வழங்கி வரு கின்றனர். பண்டைக்காலத்திருந்த வணிகர் எட்டுவீசை கொண்ட எடைக்கே அதனை வழங்கினரோ, அல்லததனிற் குறைந்த எடைக்கே அதனை வழங்கினரோ, இதுதான் என்று தெரிதற்குக் கருவியில்லை. அஃதெவ்வாறாயினும், மணங்கு என்பது ஒரு நிறுத்தலளவைக் குறிக்குங் தூய தமிழ்ச் சொல்லே யாதலும், பண்டைத்தமிழரொடு வாணிகம் நடாத்திய பண்டை மேனாட்டுமக்கள் அனைவரும் அதனைத் தமிழரிடமிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/46&oldid=1579668" இலிருந்து மீள்விக்கப்பட்டது