உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

கற்றே தாமும் அதனை நெடுக வழங்கினாராதலும் மறுக்கப் படாத உண்மைகளாமென்பது. இங்ஙனமாக மணங்கு என்பது தூய செந்தமிழ்ச் சொல்லாதலும், அது பண்டை ஆரியர் வாயில் மனா எனத் திரிந்து வழங்கியதாதலும் அபிநாஸ் சந்திரதாசர் சிறிதாயினும் அறிந்திருந்தனராயின், அதனை ஆரியச் சொல்லெனப் பிழைபடக் கொண்டு ஆரியநாகரிகமே ஏனை யெல்லா நாகரிகத்திற்கும் பிறப்பிடமா மெனக் கூறி யிழுக்கி இரார். பார்மின்! செந்தமிழ் உணர்ச்சி பெறாமையால் தமிழர் ஆரியர் வரலாறுகளை எழுதுவோர் எத்துணைப் பிழை பாடானவைகளை எழுதி உண்மையைப் பாழ்படுத்துகின்றனர்! அது கிடக்க.

இனி, இவ்வாறு உலகமெங்கணும் நாகரிகத்தைப் பரவி விளங்கச்செய்த ‘பணிகர்’ என்பார் ஆரிய இனத்தைச் சேராதவராய், ஆரியராற் பெரும்பகைவராகக் கருதப்பட்ட பண்டைத் தமிழ்மக்களில் வணிகவகுப்பைச் சேர்ந்தவராய்த், தமது வாணிக வாழ்க்கையிற் பயன்படுத்திவந்த பல அளவைச் சொற்களில் 'மணங்கு' என்பதனை ஆரியர்க்கும் பிறர்க்குங் கற்பித்தவரென்பது பெறப்படவே, பண்டைநாளில் தமிழுந் தமிழ் நாகரிகமுமே உலக மெங்கணும் பரவி, ஏனை மக்கள் எல்லாரையும் நாகரிகத்தில் ஓங்கச்செய்த வாய்மையுந் தானே பெறப்படும். இவ்வுண்மையை முன்னரே நன்கு தெளியக்

கண்ட

ன்றோ நந்தமிழ்மக்களில் முதலாராய்ச்சிப் பேரறிஞராய்த் திகழ்ந்த சுந்தரம்பிள்ளை யவர்கள் தமது மனோன்மணீய நாடகத் தமிழ்த் தெய்வவணக்கத்திற்,

சதுமறை யாரியம் வருமுன் சகமுழுதும் நினதாயின் முதுமொழிநீ அனாதியென மொழிகுவதும் வியப்பாமே'

என்று இனிது இசைத்தார்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/47&oldid=1579669" இலிருந்து மீள்விக்கப்பட்டது