உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

4. புலவர்களே நாகரிகத்திற்குத் தாயகம்

னி, ,இதுகாறும் எடுத்து விளக்கியவாற்றாற் பண்டைத் தமிழ்மக்களே ஏனைப் பழையமக்கள் எல்லாரையும் விட முதன் முதல் நாகரிகத்தில் மிக்காராய்த், தாம் கற்ற நாகரிக வாழ்க்கை முறைகளைப் பிறர்க்கெல்லாங் கற்பித்தவரென்பது போந்ததாகலின், அத்தகைய தமிழ்மக்கள் அங்ஙனம் நாகரிகத்தில் முதன்மைபெறலானது யாங்ஙனம் என்பதனைச் சிறிது ஆராய்வாம்.பழையநாள் மக்கள் வேட்டுவ வாழ்க்கையிலும், ஆடுமாடு மேய்க்கும் மேய்ப்பர் வாழ்க்கையிலும் இருந்தவரையில், தமக்கு உணவாக விலங்கினங்களைத் தேடித் திரிவதிலுங், தமக்குந் தாம் மேய்க்கும் ஆடுமாடுகளுக்கும் வேண்டும் பயறுகளையும் புல் நிலங்களையுங் தேடித்திரிவதிலுமே D காலங்கழித்துவந்தமையின், அவர்கள் நாகரிகம் எய்துதற்கு வாயில் இல்லாமலே போயிற்று. ஆனால், அவர்களிற் கூர்த்த அறிவும் ஆராய்ச்சியும் உடையார் சிலர், அவ் விருவகை வாழ்க்கை நிலையுங் கடந்து, நிலத்தைக் கிண்டிக்கிளறி விதைகள் விதைத்து அவை ஒன்று பல்லாயிரமாய்ப் பயன்றரும் உழவு தொழிலைக் கண்டறிந்து, அதனை நன்கு நடாத்தும் முயற்சியும் உடையரான பின்னரே, இடம் இடமாய் அலைந்து அல்லற்படும் நிலையா வாழ்க்கையொழிந்து, சிற்சில வளவிய இடங்களில் நிலைபெறத்தங்கி இனிது வாழும் நிலையும் வாழ்க்கை உளதாயிற்று. இவ்வாறு உழவுதொழில் நாகரிக வாழ்க்கைக்கு முதற்பெருங் காரணமா யிருத்தல்பற்றியே ஆசிரியர் திருவள்ளுவர், “சுழன்றும் ஏர்ப் பின்ன துலகம்” என்றும் “உழுவார் உலகத்தார்க்கு ஆணி” என்றும், ‘பலகுடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்பர், அலகுடை நீழ லவர்' என்றும் அருளிச் செய்தார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/48&oldid=1579670" இலிருந்து மீள்விக்கப்பட்டது