உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

மறைமலையம் - 10

இனி, நன்செய் புன்செய்ப் பயிர்கள் மிகுதியான ளைபொருள்களைத் தர அவற்றை விளைத்த வேளாளர் தாம் அவற்றைப் பகுத்துண்டு, மிஞ்சியபொருள்களைப் பிறர்க்கு விலைசெய்து, பிறரிடமுள்ள அரிய பண்டங்களைத் தாம் விலைகொண்டு, இங்ஙனமாக அவர்கள் விற்றல் வாங்கல் சய்யப் புகுந்த உளதாயிற்று.

காலந்தொட்டு வாணிக வாழ் க்கை

இவ்வாறு மக்கள் வாழ்க்கைக்கு இன்றியமையா உழவு வாணிகம் என்னும் இருதொழிலும் பெருகவே, இவை தமக்கு உதவியாக வேறு பதினெண் கைத்தொழில்களும், அவற்றைச் செய்யும் மக்களும், அவர் வாழும் நாடு நகரங்களும், அவரைப் புரக்கும் அரசரும், நிலத்தினும் நீரினுஞ் செல்லுஞ் சகடைகள் மரக்கலங்களும், பலவேறு பிரிந்த தொழில்களின் நுட்பங்களை அறிவிக்குங் கலைகளும், அவற்றைக் கற்பிக்கும் ஆசிரியர்களுங், கற்கும் மாணாக்கருங், கலைபயில் கழகங்களும், பொருள் நிலையும், உயிர்நிலையும், இம்மை மறுமை யியல்புகளும் ஆராய்ந்து இறைவனுண்மை தெளியும் அறிவு நூல்களும், எல்லாம்வல்ல ஒளியுருவினனான இறைவனைக் குறிவடிவில் வைத்து வழிபடுந் திருக்கோயில்களும், அறிவுநூல் கல்லா மாந்தர்க்கு இறைவன்றன் அருட்செயல்களைப் புலப்படுத்துந் திருவிழாக்களும் பிறவும் பெருகலாயின. இவை பெருகவே, மக்கள் அறிவும் இன்பமும் பெருகிய நாகரிகரிக வாழ்கை யுடையராயினர். ஆகவே, நாகரிக வாழ்க்கைக்குக் காரணம் உழவும் வாணிகமும் ஆமென்றும், அவை யிரண்டற்குங் காரணம் அறிவும் முயற்சியுமாமென்றும் அறிதல் வேண்டும்.

இனி, அறிவும் முயற்சியுமுடையார் தம்மில் ஒருங்கு கூடித் தாம் அறிந்தவைகளையுந் தாஞ் செய்பவைகளையுந் தம்முள் ஒருவர்க்கொருவர் தெரிவித்து மேலும் மேலும் அறிவிலும் முயற்சியிலுந் தாம் மேம்படுதற்குந், தம்போல் அறிவும் முயற்சியும் வாயாத ஏனைப் பொதுமக்கட்குத் தம் அறிவையும் முயற்சியையும் புலப்படுத்தி அவரை அவ்விரண்டிலும் மேம்படுத்துதற்கும் இன்றியமையாக் காரணமாயிருப்பது அவரெல்லாரும் வணங்குந் தமிழ் முதலான மொழிகளே யாமென்றும்; அம் மொழிகள் நாளுக்கொருவகையாய்த்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/49&oldid=1579671" இலிருந்து மீள்விக்கப்பட்டது