உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

25

திரிபடைந்து ஒவ்வொரு மக்கட்குழுவில் ஒவ்வொரு வகையாய் மாறி வழங்கி, இலக்கண இலக்கிய நூல்களின்றி இலக்கண இலக்கிய வரம்பின்றிச், சிதைந்து கொண்டே போகுமானால் முன்னோர் கருத்தைப் பின்னோரும் பின்னோர் கருத்தை இனி வருவோரும் ஒரு மக்கட் குழுவினர் கருத்தைப் பிறிதொரு மக்கட் குழுவினரும் உணர்தற்கு வாயில் இன்றி, ஒருகாலத்தில் நிலைபெற்ற ஒரு மொழி வழக்கின் பயனாய்ச் சிறிதுண்டான சிறு நாகரிகமும் அம்மொழியின் திரிபாலுஞ் சிதைவாலுந் தானுந் திரிந்து சிதையுமாகலின் நாகரிக வளர்ச்சிக்கும் நிலைபேற்றிற்கும் அடிக்காரணமாவது தமிழ் முதலான மொழிகள் தம்முள் திரிபெய்தாமலும் அயல்மொழிக் கலப்பால் தம்முடைய சொற்கள் இறந்துபடாமலும் வழங்கப் பெறுதலே யாமென்றும்; இங்ஙனம் நாகரிக அடிக்காரணமான ஒரு மொழியின் நிலைபேறு அதனை நன்காய்ந்து பயின்று அதனை மேலும் வளம்படுத்தித் தம் கூட்டத்தார்க்குப் பயன்படுத்தும் புலவோரையே புலவோரையே வேர்க்காரணமாய்க் கொண்டிருக்குமென்றும் நன்கு கருத்திற் பதித்தல் வேண்டும்.

இங்ஙனம் அறிவும் முயற்சியும் வாய்ந்த சிலரால் அவர் பிறந்த மக்கட்பகுதி உழவிலும் வாணிகத்திலுஞ் சிறந்தோங்க, அதற்கு முதற்பெருங்காரணமாய் நின்ற ஒருமொழியானது அவர் தம்மால் நிலைபேறுற்று நூல் வடிவில் வழங்கப்படலான காலந்தொட்டே, அம் மக்களுட் சிறந்த புலவரைப்பற்றியும் அவரியற்றிய நூல்களைப் பற்றியும் பிற்பிற் காலங்களில் வந்தார் அறியவேண்டுவனவெல்லாம் அறிந்து தாமும் அவர்போல் அறிவிலும் முயற்சியிலும் மேம்படுவாராயினர். ஆகவே, புலவர் என்பார் அறிவின்மிக்காரே யாவரெனவும், அறிவாவது உயிர்ப்பொருள் உயிரில் பொருள் என்பவற்றின் இயல்புகளின் உட்புகுந்து அவற்றின் உண்மைகளை உள்ளவாறுணர்ந்து அவ் வியல்புகளுக்கொப்ப அவை தொழிற்படுங்கால் ஒன்று மற்றொன்றனுக்கு உறவாகவாதல் அல்லததற்குப் பகையாகவாதல் நின்று வினைசெய்யும் வகைகளையும், அவ்வினைகளால் மக்கள் தமக்கும் பிறர்க்கும் நலன் உண்டாக அவை தம்மைப் பயன் படுத்தும் முறைகளையும் ஒருங்கறிவதுவே யாமெனவும், அறிவு பெருகப்பெருக இன்பமும் உடன் பெருகுதல் இயல்பாதலல் உயிர்ப்பொருள் உயிரில் பொருள்களில் தாம் நுண்ணிதாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/50&oldid=1579672" இலிருந்து மீள்விக்கப்பட்டது