உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மறைமலையம் 10

நுழைந்தாராய்ந்தறிந்த அழகிய கூறுகளைப் பாக்களிலும் உரைகளிலுஞ் சுவைபெருகவமைத்தும் பயில்வார்க்கு அறிவோடு இன்பத்தையும் பயக்கவல்லவர்களே நல்லிசைப் புலவராவரெனவும், பொருளியல்புகளை உள்ளவாறறிந்து உண்மை தெருட்டவல்ல நல்லிசைப் புலவர்கள் உண்மைக்கு மாறாவன சொல்லின் அறியாமையுந் துன்பமும் உண்டாமாகலின் அவையிற்றை மறந்தும் உரையாராய் உண்மையொடு பட்டனவே மொழிகுவரெனவுங் கருத்திற் பதித்தல்வேண்டும்.

இங்ஙனமாக ஒருமக்கட் குழுவின் விழுமிய நாகரிக வாழ்க்கைக்கு வேராய் நிற்கும் நல்லிசைப்புலவர், மேனாடு கீழ்நாடுகளில் நாகரிகமெய்திய எல்லா மக்கட்பரப்பின் இடையேயுங்கிடந்து, நாகரிகத்தை வளம்பெற, வளர்த்து, அவர்க்கு அறிவும் இன்பமுமாகிய பயன்களைத் தந்தது உண்மையே யென்றாலும், நாகரிக மாந்தரனைவர்க்கும் முன்னே விளக்கிக்காட்டியபடி நாகரிகத்தைக் கற்பித்து இன்றுகாறும் அழியாது நிற்குந் தமிழ்மாந்தர்க்குட் பண்டு தோன்றிய நல்லிசைப் புலவரை ஏனை அப்புலவர்கள் பெரிதும் ஒவ்வார், ஏனென்றால், அம் மற்றைநாட்டுப் புலவர், நம் பண்டைத் தமிழ்ப்புலவோரைப்போற் பொருளுண்மை உள்ளவாறறிந்து, அதனைத் தம்மனோர்க்கு அறிவுறுத்தி அவரைச் சீர்திருத்தி யிருந்தால் அவரும் அவரது நாகரிகமும் அழிந்துபடுதல் ஆகாதன்றோ? ஆனால் இற்றைக்குப் பத்தாயிரம் ஆண்டு களுக்கு முன்னமே நாகரிகத்தில் மிக்கோங்கிய எகுபதியரும் அவரது வாழ்க்கையும் இப்போதெங்கே? இற்றைக்கு ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்னரே நாகரிகத்திற் சிறந்தாராய் வாழ்ந்த சாலடியர் பாபிலோனியர் மெக்சிகர் என்னும் மாந்தரெல்லாம் இப்போதெங்கே யுளர்? இற்றைக்கு நாலாயிரம் ஆண்டுகட்கு முன்னமே நந்தமிழ் மக்களுடன் வந்து போராடிய ஆரியரும் அவர் தம் வழக்க வொழுக்கங்களும் இப்போதெங்கே? இற்றைக்கு இரண்டாயிரத்தைந்நூறு ஆண்டுகட்கு முன்னே உயர்ந்த நாகரிகம் வாய்ந்தாராய் விளங்கிய கிரேக்கரும், இரண்டாயிர ஆண்டுகட்கு முன் மேனாடுகளை யெல்லாந் தமது செங்கோலாட்சியில் வைத்து அரசு புரிந்த உரோமரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/51&oldid=1579673" இலிருந்து மீள்விக்கப்பட்டது