உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

27

கு

இப்போதெங்கேயுளர்? இவரெல்லாந் தாம் இருந்தவிடத் தில்லாது மறைந்து போக, இவர்கள் வழங்கிய மொழி களெல்லாம் நூல்வழக்கிலன்றி உலகவழக்கிலில்லாது இறந்து போக, இவர்கள் எடுப்பித்த எவ்வளவோ மிகப்பெரிய எவ்வளவோ மிக அழகிய அரண்மனைகளுங் கோயில்களும் மாளிகைகளும் எல்லாம் இடிந்து பாழாய்க்கிடக்க, எகுபதியார் சாலடியர் பாபிலோனியர் முதலான அச்சீரிய மக்கட்கெல்லாம் நாகரிகத்தைக் கற்பித்த தமிழர்களும், அவர் வழங்குந் தமிழ்மொழியும், அவரெடுப்பித்த திருக்கோயில்களும் எல்லாம் இன்றுகாறும் பழுதுறாமல் நிலைத்திருத்தல் என்னை? என்று ஆராய்ந்து பார்க்குங்கால், அது முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் தம் நுண்ணறிவின் திறத்தையும், அவர் அதனால் மடியாத ஆள்வினை மேற்கொண்டு தமது தமிழ்மொழியையுந் தந்தமிழ் மாந்தரையும் விழிப்பாய் ஒம்பிய வகையையும் நன்கு தெரிக்கின்றது அற்றேல், இஞ்ஞான்று தமிழ்மொழிப் பயிற்சி குன்றி வருதலுந், தமிழ் மக்களிற் பெருந்தொகையா யுள்ளவர் கல்விப் பயிற்சியும் ஆராய்ச்சி யுணர்வும் இல்லாராய் உண்மை நாகரிகத்தில் வரவரக் குறைந்து, உலகத்திலுள்ள ஏனை மக்கட் பகுப்பினரெல்லாம் இம்மை மறுமைக்குரிய எல்லாத் துறைகளிலும் பெருமையுற்றுவர இவர்கள் எல்லா வகைகளிலுஞ் சிறுமையுற்று வரல் யாது காரணத்தாலெனின்; இஞ்ஞான்றைத் தமிழ்ப்புலவரிற் பெரும்பாலார் நுண்ணறிவும் நடுநிலை யாராய்ச்சியும் மடியா ஆள்வினையும் வாயாராய், அவை வாயாமையால் தமது தமிழ் மொழியையுந் தந்தமிழ் மாந்தரையும் விழிப்பாய் ஓம்புதற்குத் தக்க தகுதி யில்லாராய் இருத்தலினாலே யாமென்பது புலனாகின்றது. எக்காலும் நீர்வரத்துக் குன்றா ஓர்யாறு இருக்குந்தனையும் அதன் இருமருங்குமுள்ள நாடுநகரங்களெல்லாம் எல்லா வளனுங் குறைவரப்பெற்றுச் செழித்தல் போலவும், நந்தா மணி விளக்கு ஒன்று ஒளிருந்தனையும் அஃதொளிரும் இடனெல்லாம் இருளின்றி ஒளிகெழுமி விளங்குதல் போலவுங், குடிகளின் நலத்தையே எந்நாளுந் கோரும் ஒரு செங்கோன் மன்னன் அரசுபுரியுந்தனையும் அவனது வெண்கொற்றக் குடைநிழற்கீழ் வாழுங் குடிமக்கள் அனைவரும் இன்பவாழ்க்கையிற் றிகழ்தல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/52&oldid=1579674" இலிருந்து மீள்விக்கப்பட்டது