உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

❖ LDMMLDMELD- 10 மறைமலையம்

போலவும், விழுமிய புலவர் ஒருவர் இருந்தால் அவரைச் சூழ்ந்துவாழும் மாந்தரெல்லாரும் அவர்போல் விழுமியராய் வாழ்குவர். மற்று, விழுமிய புல்வர் இல்லாத மக்கட்குழுவோ, வறண்ட யாற்றையடுத்த ஊர்போலவும், ஞாயிறுந் திங்களும் விளக்கும் இல்லாஇராப் பொழுதுபோலவுஞ், செங்கோன் மன்னனில்லாக் குடிகள் போலவுஞ் சீரழிந்து போமன்றோ? அற்றேல், முற்காலத்திருந்த தமிழ்ப்புலவர் நிலைக்கும் பிற்காலத்துள்ள தமிழ்ப் புலவர் நிலைக்கும் வேற்றுமை காட்டுகவெனிற், காட்டுதும்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/53&oldid=1579675" இலிருந்து மீள்விக்கப்பட்டது