உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29

5. பண்டைப்புலவர் தமிழ் ஓம்பினமை

இற்றைக்கு ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னிருந்த தமிழ்ப்புலவர் அனைவருந் தமது தமிழ்மொழி திரிபடைந்து மாறுதற்கும் அயன்மொழிச் சொற்கள் அதன்கட் புகுந்து விரவுதற்கும் இடங்கொடாமல், இலக்கண இலக்கிய வரம்புகோலித், தாமுந் தனித்தமிழிலேயே நூல்கள் இயற்றி, அதனை ஒருமுகமாய் நின்று கண்ணுங் கருத்துமாய்ப் பாதுகாத்து வந்தனர். தமிழ்ச் சொற்கள் திரிபடையாமலும், அயன்மொழிச் சொற்கள் விரவுதலாற்றன்சொற்கள் இறந்துபடாமலும் வழங்கி வருதலாலன்றோ இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மொழியில் எழுதப்பட்ட நூல்களை நாம் இன்றைக்கும் எளிதிலே கற்றறியப் பெறுகின்றோம்? ஆசிரியர் திருவள்ளுவர் அருளிச்செய்த திருக்குறள் இற்றைக்கு இரண்டாயிர ஆண்டுகளுக்கு முற்பட்டதாயிருந்தும், அதன் பாக்களின் சொல்லும் பொருளும் இற்றைக்கும் நம்மால் எளிதில் அறியப்படுகின்றன வல்லவோ?

"கற்றதனால் ஆய பயன்என்கொல வால்அறிவன் நற்றாள் தொழாஅ ரெனின்”

“கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையர் கல்லா தவர்”

'இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை

எல்லாருஞ் செய்வர் சிறப்பு

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்

தொழுதுண்டு பின்செல் பவர்'

وو

'யான்நோக்குங் காலை நிலன்நோக்கும் நோக்காக்காற் றான்நோக்கி மெல்ல நகும்”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/54&oldid=1579676" இலிருந்து மீள்விக்கப்பட்டது