உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 10.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலப் பிற்காலத் தமிழ்ப்புலவோர்

.

31

பிரிவினர் ஆயினார். ஐயோ 1 1911 ஆம் ஆண்டு எடுத்த க்கணக்கின்படி இவ்விந்திய நாட்டில் திராவிடமொழி பேசுவோர் தொகை ஆறுகோடியே இருபது நூறாயிரமாகும். இத்துணைப் பெருந்தொகையினரான மக்கள் அனைவருந் தமக்குப் பழமையை உரியதான தமிழ்மொழி யொன்றை யே வழங்கிவந்திருந்தனராயின், அவர் எத்துணை ஒற்றுமையும் வலிமையும் நாகரிகமும் வாய்ந்தவராய் வாழலாம்! பழைய தமிழைப் பலவாறு சிதைத்துத் திரித்தமையாலும் வட சொற்களைக் கலந்து கொண்டமையாலுமன்றோ இத்தனைப் பெருங்கூட்டத்தவரும் வெவ்வேறு சிறு கூட்டத்தவராய் ஒருவரோ டொருவர் அளவளாவுதற் கிடனின்றி, வெவ் வேறினத்தவர்போல் வெவ்வேறு நாட்டவர்போல நாட்கழிக் கின்றனர். இவர் எல்லாருந் தமிழாகிய தமது பண்டை மொழியையே வழங்கிப் பிளவுபடாதிருந்தாற், குமரிமுதல் இமயம் வரையில் இற்றைக்குந் தமிழுந் தமிழருமே பிறங்கி நிற்கும் பெரும்பேறு உளதாமன்றோ! இமயம் முதற் குமரி வரையிலுள்ளாரெல்லாரும் நம் பண்டைப் பேராசிரியர் இயற்றியருளிய தொல்காப்பியம், திருக்குறள், திருவாசகம் முதலான ஒப்புயர் வில்லாச் செந்தமிழ் நூல்களைச் செவ்விதிற் பயின்று இம்மைமறுமைப் பயன்களெல்லாம் ஒருங்கெய்து வரல்லரோ! ஆதலாற், பண்டைத் தமிழகத்திலிருந்து பிரிந்து போய்த் தமக்குரிய இனிய செந்தமிழ்மொழியை ஓம்பாது அதனைப் பலவகையால் மாறுபடுத்தி அதனால் தாமும் பல்வேறினமாய் மாறித் தம் பிறவிப்பயனையும் இழந்த ஏனை மக்கள் போலாது, நம் பழைய நல்லிசைப்புலவரது ஆணை வழி நின்று, அவர் வழிவந்த புலவருந் தமிழைத் தூயதாக ஒம்பி வளர்த்துத் தந்த பேருதவிக்கு எளியரேம் எங்ஙனங் கைம்மாறு செலுத்தவல்லேம்! நம் பண்டையாசிரியர் இயற்றியருளிய நூல்களிற் செல்லுக்கும் ஆடிப்பெருக்கிற்கும் இரையாய்ப் போன எண்ணிறந்த நூல்கள் ஒழிய எச்சமாக இஞ்ஞான்று நாம் நம் கைகளில் ஏந்தி மகிழுந் தொல்காப்பியம், பரிபாடல், இறைய னராகப் பொருளுரை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பத்துப்பாட்டு, திருக்குறள் முதலான அருந்தமிழ்நூல்களைச் சிறிதாயினும் உற்று நோக்குவாமாயின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_10.pdf/56&oldid=1579678" இலிருந்து மீள்விக்கப்பட்டது