உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

கைமேற் றலைவைத் திரவிற் கிடக்கக் கடைக்கணின்று பெய்ந்நீர் அழற்ற நிறந்திரி வான பெருமணிகள் மொய்பொற் கடகம்வில் நாண்டழும் புற்ற முனைநழுவிச் செய்யில் உரிஞ்சப் பலகால் எடுத்துச் செறிக்கின்றெனே.

-

69

(16)

-

(இ-ள்) கைமேல்தலை வைத்து இரவில் கிடக்க - கைமேல் தலையை வைத்துக்கொண்டு இராப்பொழுதிற் படுத்துக் கிடக்கையில், கடைக்கண் நின்று பெய்நீர் - என் கண்ணின் கடைகளிலிருந்து சொரியும் நீரின் வெப்பமானது, அழற்ற சுடுதலால், நிறம் திரிவான பெருமணிகள் மொய் பொன் கடகம்- தம் நிறம் மாறின பெரிய இரத்தினங்கள் நெருங்க அழுத்திய பொன்னாற் செய்த எனது தோள்வளையானது, வில் நாண் தழும்பு உற்ற முனை நழுவி வில்லின் நாண்கயிறு பட்டு வடுவாகிய இடத்தினின்றுங் கழன்று, செய்யில் உரிஞ்ச - எனது முன் கையில் வீழ்ந்து உராய்தலால், பலகால் எடுத்துச் செறிக்கின்றென் அதனைப் பலமுறையும் மேல் உயர்த்தி அஃதிருந்த இடத்திற் சேர்ப்பிக்கின்றேன் என்றவாறு. ஏ: அசை. உன்மேற் பற்றின்றி உவர்ப்பான் எவனென உன்னினையோ அன்னான் நின்கூட்டம் விழைந்திங்குளான் அஞ்சும் ஆரணங்கே பொன்னாள் தனைநயப் போனை மறுப்பினும் போவதற்கம் மின்னாள் விரும்பப் படுவோன் அவளை வெறுத்தலின்றே.

(17)

(இ-ள்) உன் மேல் பற்று இன்றி உவர்ப்பான் எவன் என உன்னினையோ - உன்மேல் அன்பு இல்லாமல் வெறுப்பவன் எவன் என்று நீ நினைத்தனையோ, அன்னான் - அத் தன்மை யினான், நின் கூட்டம் விழைந்து இங்கு உளான் - நினது சேர்க்கையினை மிக அவாவி இவ்விடத்திலேயே இருக்கின்றான்; ஆதலால், அஞ்சும் ஆர் அணங்கே - நின்னை விலக்கிவிடு வானென வீணே எண்ணி அஞ்சா நின்ற பெறுதற்கு அரிய தேவமாதரை ஒத்தவளே, பொன்னாள் தனை நயப்போனை மறுப்பினும்-திருமகள் தன்னை விரும்புவானிடத்தே செல்வதற்கு சையாவிடினும், போவதற்கு அம் மின்னாள் விரும்பப் தானே செல்வதற்கு அத்திருமகளால் விரும்பப் படுவாள் ஒருவன், அவளை வெறுத்தல் இன்று அத் திருமகளை வெறுத்தல் இல்லை என்றவாறு. ஏ: அசை.

படுவோன்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/102&oldid=1580059" இலிருந்து மீள்விக்கப்பட்டது