உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70

மறைமலையம் – 11 11

நொடிசிமிழா விழியால்என் காதலியை நோக்குங்கால் வடிதீஞ்சொற் றொடர்தொடுக்கும் வண்மையில்அன் னாள்முகத்துக் கொடிபோல் ஒருபுருவம் மேல்நெறிந்து குலவியிடப்

பொடியுங் கதுப்பென்மேற் காதல்புல னாக்குமால்.

-

(18)

(இ-ள்) நொடி சிமிழா விழியால் ஒரு நொடிப் பொழுதும் இமையாத கண்களோடு, என் காதலியை நோக்குங்கால் - என் காதலியை யான் உற்றுப் பார்க்குமிடத்து, வடிதீம்சொல் தொடர் தொடுக்கும் வண்மையில் - வடித் தெடுத்தால் ஒத்த தெளிவினையுடைய இனிய சொற்களாற் செய்யுளைத் தொடர்ந்தமைக்கும் வகையில், அன்னாள் முகத்து அத்தகைய நிலையிலுள்ளவளான சகுந்தலையின் முகத்தில், காடிபோல் ஒரு புருவம் மேல்நெறிந்து குலவியிடகொடியை யொத்த ஒரு புருவமானது மேலே வளைந்து பொருந்தாநிற்க, பொடியும் கதுப்பு - சிலிர்க்குங் கன்னங்களானவை, என்மேல் காதல் - என்மேல் அவட்குள்ள காதலன்பினை, புலன் ஆக்கும் - தெரியச் செய்யும் என்றபடி. ஆல்: அசை.

இரக்கமிலா அரசே! நான் என்செய்வேன்! இரவுபகல் எரிக்கின்றா னென்உடம்பை எழிற்காமன் நின்மேலே பெருக்கின்ற தென்காதல் பேதையேன் நின்நெஞ்சம் இருக்குமா றுணர்ந்திலேன் எனக்கதனை இயம்புதியோ.

(19)

(இ-ள்) இரக்கம் இலா அரசே -நின்பால் வைத்த காதலால் துன்புறும் என்னைக் கண்டும் என்பால் இரங்குதல் இல்லாத மன்னா!' நான் என் செய்வேன் - ஏழையேன் யாதுசெய்வேன், எழில் காமன் என் உடம்பை இரவு பகல் எரிக்கின்றான் மனவெழுச்சியுடைய காமதேவன் எனது உடம்பை இரவும் பகலுந் தீயில் வெதுப்புகின்றான், நின்மேலே என் காதல் பெருக்கின்றது- நின்மேற் கொண்ட என் பேரன்பானது வரவரப் பெரிதாகின்றது, பேதையேன் நின் நெஞ்சம் இருக்கும் ஆறு உணர்ந்திலேன் அறிவதறியாச் சிறியேனான யான் நினது நெஞ்சத்தின் றன்மை இருக்கும் வகையினை உணர்ந்தேனில்லை, ஆதலால், எனக்கு அதனை இயம்புதியோ - எனக்கு நின் உள்ளத்தில் உள்ளதைத் தெரியக் கூறுவாயோ என்றவாறு.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/103&oldid=1580060" இலிருந்து மீள்விக்கப்பட்டது