உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

மெல்லியலாய்! நின்னையவன் மென்மேலும் எரிக்கின்றான், சொல்லவொணா வகையாக என்னையோ சுடுகின்றான்; அல்லொழிந்த விடிநாளில் அழிமதியை வாட்டுதல்போல் எல்லவன்மற் றதன்மனை அல் லியைவாட்ட லில்லையே.

71

(20)

(இ-ள்) மெல்லியலாய் நின்னை அவன் மேல் மேலும் எரிக்கின்றான் - மெல்லிய இயல்பினையுடையாய் உன்னை அக்காமன் மேலும் மேலும் அழற்றுகின்றான், என்னையோ சொல்ல ஒண்ணாவகையாகச் சுடுகின்றான் - என்னையோ அவன் நாவினாற் சொல்லக் கூடாதபடியாகக் கொளுத்துகின்றான், எல்லவன் அல் ஒழிந்த விடி நாளில் அழிமதியை வாட்டுதல் போல் பகலவன் இருள் நீங்கிய விடியற்காலையில் ஒளி மழுங்கிய திங்களை மெலியச் செய்தல்போல, மற்று அதன்மனை அல்லியை வாட்டல் இல்லையே - வேறு அதன் மனையாளான அல்லி மலரை மெலிவித்தல் இல்லையன்றே என்றவாறு.

-

ஒருபொழுதும் என்உளத்திற் பிரியாதாய்! உனைக்காண்பார் மருளமனம் பேதுறுக்கும் மதர்விழியாய்! நினையன்றிப் பெரியபொருள் பிறிதறியா என்நெஞ்சைப் பிறிதறிந்தால் எரிவேடன் கணைகொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ!

-

(21)

(இ-ள்) ஒருபொழுதும் என் உளத்தில் பிரியாதாய் ஒரு நொடி நேரமும் என் நெஞ்சைவிட்டு அகலாதவளே, உனைக் காண்பார் மருள மனம் பேதுறுக்கும் மதர்விழியாய் - நின்னைக் காண்பவர்கள் மயங்கு மாறு அவர்கள் உள்ளத்தைக் கலங்கச் செய்யுங் களித்த விழிகளை யுடையவளே, நினை அன்றிப் பெரிய பொருள் பிறிது அறியா என் நெஞ்சை - நின்னையல்லாமற் பெரிதாகக் கருதத்தக்க பொருள் வேறேதும் அறியாத எனது நெஞ்சத்தை, பிறிது அறிந்தால் - வேறாக நீ அறிந்தால், எரிவேடன் கணை கொல்ல இனைகின்றேன் பிழைப்பெனோ - மன் மதனின் சுடுகின்ற அம்புகள் வருத்த வருந்துகின்ற யான் உயிரோடிருத்தல் கூடுமோ என்றவாறு.

L

கண்மணி யனையாய்! நின்மனங் கவலேல்; நீ வேண்டுவன புரிய ஈண்டுநான் உளெனால்; பெருகயர் வொழிக்கும் மரையிலை யாக்கிய நளிவிசிறி கொண்டு குளிர்வளி தருகோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/104&oldid=1580061" இலிருந்து மீள்விக்கப்பட்டது