உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மறைமலையம் – 11

-

குமரி வாழையின் அமைவுறு குறங்கை, என்

மடிமிசைச் சேர்த்திச் செந்தா மரைபுரை அடிக ளிரண்டும் மெல்லென வருடுகோ; அழகிய தோகாய்! பழுதற உரையே!

(22)

(இ-ள்) கண்மணி அனையாய் என்கண்ணின் மணியை ஒப்பவளே, நின்மனம் கவலேல் - நினது மனத்தின்கட் கவலைப் படாதே, நீ வேண்டுவன புரிய - நீ விரும்புகின்றவைகளைச் செய்ய, ஈண்டு நான் உளன் - இங்கே நான் இருக்கின்றேன், ‘ஆல்' : அசை. பெருகு அயர்வு ஒழிக்கும் - மிகுகின்ற தளர்வினை நீக்கும், மரை லை ஆக்கிய -தாமரையிலையாற் செய்த, நளி விசிறிகொண்டு குளிர்ந்த விசிறியினால், குளிர்வளி தருகோ-குளிர்ங் காற்றைத் தருவேனா, குமரிவாழையின் - இளவாழை மரத்தைப் போல், அமைவுறு குறங்கை - வழுவழுப்பாகச் சமைந்த நின்தொடை களை, என் மடிமிசைச்சேர்த்து - என் மடியின்மேற் சேரவைத்து, சந்தாமரைபுரை- சிவந்த தாமரைப் பூவையொக்கும், அடி கள் இரண்டும் மெல்லென வருடுகோ நின் அடிகள் இரண்டனையும் மெதுவாகத் தடவுவேனா, அழகிய தோகாய் அழகிய மயிற்றோகையின் சாயலை யுடையாளே, பழுது அற உரையே - நினக்குற்ற சிதைவு நீங்கச் சொல்வாயாக என்றவாறு.

கதுவப் படாம லிளைதா முளைத்துக் கயங்கெழுமிப் புதிதே விரிந்த மலரிற் றுளும்பிப் பொழிநறவைக் கொதிகாதல் வண்டுணல் போலச் சுவையாக் குழையும்இதழ் மெதுவே சுவைத்தமிழ் துண்டணங் கேபின் விடுக்குவெனே.

(23)

(இ-ள்) கயம் – ஓர் ஆழ்ந்த குளத்தினின்றும், கதுவப் படாமல் - எவராலும் பற்றப்படாமல், இளைதுஆக - இளைய தாக, கெழுமி முளைத்து - பொருந்தித் தோன்றி, புதிதே விரிந்த மலரில் துளும்பிப் பொழிநறவை புதிதாக மலர்ந்த பூவின்கண் நிறைந்து தளும்பிச் சொரிகின்ற தேனை, கொதிகாதல் வண்டு உணல்போல - பருகுதற்குக் கொதிக்கின்ற அவாவினையுடைய தொரு வண்டு குடித்தல்போல, சுவையாக் குழையும் இதழ் - சுவைத்து அஃதாவது சுவைமிகுந்து நெகிழ்ந்திருக்கும் நினது இதழினை, மெதுவே சுவைத்து - யான் மெல்லச் சுவைத்து, அமிழ்துஉண்ட - அதன்கண் ஊறாநின்றபுனல் அமிழ்தத்தை உட்கொண்டு, அணங்கே தேவமாது போன்றாய், பின்

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/105&oldid=1580062" இலிருந்து மீள்விக்கப்பட்டது