உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

அதன்பிறகு, விடுக்குவென்

அசைநிலை.

73

-

நின்னைப் போகவிடுவேன்; ஏ :

விழைபொருள் பெறுதற் கிடையூறு பலவே,

கருமயிரிறைசேர் பெருவிழி யுகளும்

வியர்த்தவொண் முகத்தையான் உயர்த்துதொறும் பிணங்கி

வெறித்தேன் சுவைக்கும் மறுத்துரை மொழிந்து

தவளமுகிழ் விரலாற் பவளவிதழ் பொத்தித்

தோட்புறங் கோட்டின ளதனால் வாய்ப்புற

இதழ்த்தேன் பருகிலன் அந்தோ! அதற்பின்

யாண்டுச் செல்கேன்? காண்டகு காதலி

(23)

(சுற்றிலும் நோக்கி)

முந்தின் புற்றவிப் பந்தர்வயின் அமர்கோ; மெல்லுருப் பட்டுப் பல்வயிற் சிதறிய மென்மலர்ப் பாயலக் கன்மே லுளதால்; கிளிநகம் பொறித்த அளிநசைமுடங்கன் மரையிலை வாடியிவ் வுழையே யுறுமால்; நாளக் கடகமவள் தோளிற் கழன்றுவிழுந்து ஆங்கே கிடந்தன; ஈங்கிவை நோக்க வெறிதே யாயினுஞ் சிறிதொரு போதிற் சூரற் பந்தரைப் பிரிந்து

வாரற் கென்மனம் வலியில தன்றே

-

(24)

விரும்பப்பட்ட

(இ-ள்) விழைபொருள் பெறுதற்கு பொருளையடைதற்கு, டையூறு பல தடைகள் பல உள, கருமயிர் இறைசேர் பெருவிழிஉகளும் - கரிய மயிரையுடைய இறைப் பையின்கட் பொருந்திய பெரிய விழிகள் பாயாநின்ற, வியர்த்த ஒள்முகத்தை - வியர்வு அரும்பிய ஒளிபொருந்திய முகத்தை, யான் உயர்த்துதொறும் - யான் மேல் நிமிர்த்துந் தோறும், பிணங்கி - மாறுபட்டு, வெறித்தேன் சுவைக்கும் மறுத்த உரை மொழிந்து - மணங்கமழுந் தேனைப்போல் இனிக்கும் மறுத்த மொழிகளைச் சொல்லி, தவளமுகிழ் விரலால் பவள இதழ் பொத்தி -வெள்ளிய பூ அரும்புகளையொத்த தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/106&oldid=1580063" இலிருந்து மீள்விக்கப்பட்டது