உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

மறைமலையம் – 11 11

-

விரல்களாற் பவளம் போன்ற தன் வாய் இதழ்களை மூடி, தோள்புறம் கோட்டினள் - தோளின் பக்கமாய்த் தன்முகத்தை வளைத்தனள், அதனால் வாய்ப்புற இதழ்த்தேன் பருகிலன் அந்தோ - அதனாலே வளம்பெற அவளிதழின் தேனைக் குடித்திலேன் ஐயோ!, அதன்பின் - என் காதலியைப் பிரிந்த அதற்குப்பின், யாண்டுச் செல்கேன் எந்த இடத்திற்குப் போவேன், காண்தகு காதலி முந்து இன்புற்ற இப் பந்தர்வயின் ப் அமர்கோ - காட்சிக்குத் தக்காளான என்காதலி முன்னே மகிழ்ந்திருந்த இப் பந்தலினிடத்தே அமர்வேனா, மெல் உருப்பட்டுப் பல்வயின் சிதறிய அவளது மெல்லிய உடம்புபட்டுப் புரளலாற் பலவிடங்களிலுஞ் சிதறுண்ட, மெல் மலர்ப் பாயல் அக்கல்மேல் உளது - மெல்லிய பூக்களையுடைய அல்லது பூக்களால் ஆகிய படுக்கை அச் சலவைக்கல்லின்மேற் கிடக்கின்றது, ஆல் : அசைநிலை, கிளி நகம் பொறித்த - கிளிமூக்கை யொத்த தன் நகங்களால் வரைந்த, அளிநசை முடங்கல் மரையிலை - மிக்க அன்பினால் ஆன விருப்பத்தைப் L புலப்படுத்துந் திருமுகமாகிய தாமரையிலை, வாடி இவ் உழையே உறும் வாடிப் போய் இப் பக்கத்திலேயே கிடக்கின்றது, நாளக் கடகம் - தாமரைத் தண்டினாற் செய்யப்பட்ட தோள்வளை, அவள் தோளில் கழன்றுவிழுந்து ஆங்கே கிடந்தன - அவளுடைய ய தோள்களினின்றுங் கழன்று கீழ்விழுந்து அவ்விடத்தே கிடந்தன, ஈங்கு இவை நோக்க -இங்கே இவைகளைப் பார்க்கையில், வெறிதேயாயினும் - அவள் இல்லாமையால் வெறுமையாகக் காணப்படினுஞ், சிறிதொரு போதில் சிறியதொரு பொழு திலுஞ், சூரல் பந்தரைப் பிரிந்து - பிரப்பங் கொடியினால் ஆகிய இப் பந்தரைப் பிரிந்து, வாரற்கு என்மனம் வலியிலது வருதற்கு - என் உள்ளம் வலிமை யுடையதாயில்லை, அன்று, ஏ - அசைநிலை.

இலைகிளர் பூண்டுக்குத் தலைவ னாகிய

சுடரொளி மதியங் குடபால் வரையின்

ஒருபுறஞ் செல்லா நிற்ப, ஒருபுறம்

வைகறை யென்னுங் கைவல் பாகனை முன்செல விடுத்துப் பொன்போன் ஞாயிறு கீழ்பா லெல்லையிற் கிளரு மன்றே, ஒருகா லீரிடத் தீரொளிப் பிண்டந்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/107&oldid=1580064" இலிருந்து மீள்விக்கப்பட்டது