உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

மறைமலையம் – 11 11 ✰

எய்தும் சாம்துயர் - தாம் அடையுஞ் சாக்காடு அன்னதுன்பம், பொறுத்தற்கு அரிது எனப்படும் - தாங்குதற்காகாதது என்று சொல்லப்படும்; 'அன்று ஏ' : அசைநிலைகள்.

தீ

"முன்னுக தவமுதிர் முனிவ! நின்மகள்

வன்னிமா மரந்தனுள் வளர்தீ வைத்தல்போல் இந்நிலம் நலம்பெறத் துடியந்தன் னிட்ட

பொன்னுயிர் அகட்டினிற் பொலியக் கொண்டனள்.

(26)

(இ-ள்) தவம் முதிர் முனிவ - தவவொழுக்கத்திற் சிறந்த முனிவனே, முன்னுக- நினைந்திடுக, வன்னிமாமரம் தன்னுள்வளர் தீ வைத்தல்போல் - வன்னியென்னும் பெயருடைய பெரியமரம் தன்னுள்ளே வளரத்தக்க தீயினை வைத்திருத்தல் போல, இந்நிலம் நலம்பெற - இந்நிலவுலகத்துள்ள உயிர்கள் வாழ்க்கை நலத்தை யடைய, துடியந்தன் இட்டபொன் உயிர் - துஷியந்தன் இ L தாகிய பொலிவுள்ள உயிரை, அகட்டினில் பொலியக் கொண்டனள் - தன்வயிற்றினுள்ளே நிறையக் கொண்டாள் என்க. இன்று சகுந்தலை போகின் றாளென் றெண்ணுதொறுங் கன்றுவ தொன்றுங் கவலையினாலென் காழ்மனனே துன்றிய கண்ணீர் சோரா தம்ம தொடர்புற்று

நின்றென் மிடறோ கம்முவ தென்னென் னிலைதானே

(27)

என்று

(இ-ள்) இன்று சகுந்தலை போகின்றாள் எண்ணுதொறும் - இன்றைக்குச் சகுந்தலை என்னைப் பிரிந்து போகின்றாளே என்று நினைக்குந்தோறும், என் காழ்மனன் ஒன்றுங் கவலையினால் கன்றுவது - எனது வயிரம் ஏறிய உள்ளமும் பொருந்திய கவலையினால் நைகின்றது, துன்றிய கண்நீர் சோராது அம்ம என் கண்களில் வந்து நிறைந்த கண்ணீரானது வடியாது யான் அடைக்கவே, தொடர்பு உற்று நின்று என் மிடறு ஓ கம்முவது - அதனொடு தொடர்பு கொண்டு நின்று எனது தொண்டையோ கம்மிக்கொள்கின்றது, என் நிலைதான் என் - எனது நிலைமையிருந்தவாறு என்னே! என்றவாறு.

வழியிலிடையிடையே கொழுந்தாமரை பொதுளி வளஞ்சால் தடங்கள் வயங்கிடுக க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/109&oldid=1580066" இலிருந்து மீள்விக்கப்பட்டது