உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

அழிவெங் கதிர்வருத்தம் அடர்ந்த நிழன்மரங்கள்

அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக,

கழிய மலர்த்துகள்போற் கழுமு புழுதியடி

கலங்கா தினிதாய்க் கலந்திடுக.

செழிய மலயவளி திகழ வுலவிடுக

திருவே யனையாள் செலுநெறியே.

77

(28)

(இ-ள்) வழியில் இடையிடையே டையிடையே -வழியின் நடு நடுவே, கொழுந்தாமரை பொதுளி வளம்சால் தடங்கள் வயங்கிடுக காழுவிய தாமரைம லர்கள் நிறைந்து வளம்மிக்க அகன்ற குளங்கள் விளங்குவனவாக, அழி வெம் கதிர் வருத்தம் அடர்ந்த நிழல் மரங்கள் அகற்றி மகிழ்ச்சி அளித்திடுக மிக்க வெப்பத்தினைத் தரும் பகலவனால் உண்டாகும் வருத்தத்தினை நெருங்கிய இலைகளை யுடையமையால் இடைவெளியில்லாத நிழலையுடைய மரங்கள் நீக்கி மகிழ்ச்சியினைத் தந்திடுக, கழிய மலர்த்துகள் போல் கழுமு புழுதி அடி கலங்காது இனிதாய்க் கலந்திடுக - மிகுந்த மகரந்தப்பொடி போல் நிறைந்த மட்புழுதி யானது அடிகள் துன்புறாதபடி இனிதாக வழியிற் பொருந்துக, திருவே அனையாள் செலும்நெறி செழிய மலயவளி திகழ உலவிடுக - இலக்குமியை ஒத்தவளாகிய சகுந்தலை செல்லும் வழியில் வளவிய பொதியமலையினின்று வீசுந் தென்றற் காற்றானது தோன்ற உலவுக என்றவாறு; ஏ : அசை.

தாமரை யிலைப்பினே, தங்கு சேவலைக்

காமரு மகன்றிறான் காண லாமையாற்

பூமரு வாயினாற் புலம்பிக் கூவிட

வேமென துளமிது விழிகள் காணவே.

(29)

(இ-ள்) தாமரை இலைப்பினே தங்கு சேவலை தாமரையிலைகளுக்குப் பின்னே மறைந்து தங்கியிருக்கின்ற ஆண் அன்றிலை, காமரு மகன்றில்தான் காணலாமையால் - காம விருப்பு மிகுதியும் உடைய பெண் அன்றிற் பறவையானது காணாமையால், பூமரு வாயினால் புலம்பிக் கூவிட - பூவைக் கோதுந் தன்வாயினால் வருந்திக் கூவாநிற்க, இது விழிகள் காணவே இதனை என் கண்கன் காணவே, எனது உளம்வேம் - என் உள்ளமானது வேகாநிற்கும் என்றவாறு.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/110&oldid=1580067" இலிருந்து மீள்விக்கப்பட்டது