உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • மறைமலையம் – 11

விழுநறவு வேண்டிவிரி மாவிணரிற் பருகிச்

செழுமுளரி யிடைவறிது சேருமிள வண்டே! செழுமுளரி யிடையிருந்து திகழ்மாவை நீயோர்

பொழுதுமறந் துறைகுவது பொருந்துமோ உரையாய்?

(30)

(இ-ள்) விழுநறவு வேண்டி - சிறந்த தேனைப் பெற விரும்பி, விரி மா இணரில் பருகி - விரிந்த மாமரத்தின் பூங்கொத்திலிருந்து அதனைக் குடித்து, செழுமுளரியிடை வறிது சேரும் இளவண்டே - வண்டே, செழுமையான தாமரை யினிடத்து வீணே சென்று அடையும் இளசெழுமுளரி யிடை யிருந்து சழுவிய தாமரையின் பாற்சேர்ந்திருந்து கொண்டு, திகழ்மாவை நீ ஓர் பொழுதும் மறந்து உறைகுவது - விளங்கா நின்ற மாமலரினை நீ நொடிப்பொழுதேனும் மறந்துவிட்டு இருத்தல், பொருந்துமோ உரையாய் - நினக்கு இசைவதாகுமோ சொல்லாய் என்றவாறு.

ஒரு

வெங்கதிரின் வெப்பம் விரிதலையிற் றாங்கித்

தங்குவோர்க் குக்கீழ் தண்ணிழல்செய் மரம்போல்

இங்குநின் னின்பங் குறியாது குடிகட்குப்

பொங்குதுயர் கொளுநின் பொலிவாழ்க்கை யிதுவே.

(31)

இ-ள்) வெம்கதிரின் வெப்பம் - வெவ்விய ஞாயிற்றின் வெப்பத்தை, விரிதலையில் தாங்கி - தமது விரிந்த தலையிலே தாங்கிக்கொண்டு, கீழ் தங்குவோர்க்குத் தண்நிழல் செய்மரம் போல் - தம் அடியில் வந்து தங்குவார்க்குக் குளிர்ந்த நிழலைத் தருகின்ற மரங்களைப்போல், இங்கு நின் இன்பம் குறியாது இவ்வுலகத்தே நீ நுகர்தற்குரிய இன்பங்களை ஒரு பொருளாகக் கருதாமல், குடிகட்கு - நின் குடிமக்களின் நின் குடிமக்களின் பொருட்டாக, பொங்குதுயர் கொளும் மிகுந்த துன்பத்தை யடையும், நின் பொலிவாழ்க்கை இது - நினது சிறப்புமிக்க அரசவாழ்க்கையின் தன்மை இப்படிப்பட்டதாயிருக்கின்றது; ஏ: அசை.

-

-

ஒறுக்கும்வலி யுடைமையா லுண்மைநெறி திறம்புநரை மறுக்கின்றாய் புரக்கின்றாய் மாறுபடு வோர்வாழ்க்கை அறுக்கின்றா யருஞ்செல்வ முறுவழிச்சேர் கேள்போலா தறக்கிழமை குடிகண்மே லருள்கின்றா யண்ணலே.

(32)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/111&oldid=1580068" இலிருந்து மீள்விக்கப்பட்டது