உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

79

இ-ள்) ஒறுக்கும் வலி உடைமையால் - தண்டித்தற்குரிய ஆற்றல் இருத்தலால், உண்மைநெறி திறம்புநரை மெய்வழியினின்றுந் தவறி நடப்போரை, மறுக்கின்றாய் - நீ அதனினின்றும் நீக்குகின்றாய், புரக்கின்றாய் - வலியிலாரைப் பாதுகாக்கின்றாய்,மாறுபடுவோர் வழக்கை - ஒருவர் ஒருவரோடு மாறுபாடுறுவாராய்க் கொண்டு வரும் வழக்கை, அறுக்கின்றாய் இஃது அறத்தின்பாலது இஃது அல்லாதது என்று ஆராய்ந்து வரையறுக்கின்றாய், அரும் செல்வம் உறுவழிச் சேர் கேள் போலாது ஒருவர்க்குப் பெறுதற்கரிய செல்வம் வந்தடைந்த காலத்து அவர்பால் வந்து சேரும் உறவினர் போலாமல், அறக்கிழமை குடிகள் மேல் அருள்கின்றாய் அண்ணலே - அறம் (தருமம்) ஆகிய உரிமையினை நின் குடிமக்கட்கு அளித்து அருள் செய்கின்றாய் பெருமானே என்றவாறு.

-

வடுவறு பேரெழில் வயங்கவிவ் வயின்வருங் கொடிபுரை யுருவினாள் தன்னைக் கூடிநான் கடிமணம் அயர்ந்ததாக் கருத லாமையால் விடியலிற் பனியகத் துள்ளமென் மல்லிகை படிதரா துழிதரும் பைஞ்சிறை வண்டெனத் தொடுதலும் விடுதலுந் துணிய கில்லேனே.

(33)

(இ-ள்) வடுஅறு குற்றம் அற்ற, பேர்எழில் வயங்கமிகுந்த அழகு விளங்க, இவ்வயின் வரும் - இவ்விடத்தே வந்திருக்கும், காடி புரை உருவினாள் தன்னைக்கூடி பூங்கொடி

-

போல் துவளாநின்ற உருவத்தினையுடைய இப் பெண்ணைப் புணர்ந்து, நான் கடி மணம் அயர்ந்ததாக்கருதலாமையால்-யான் புதியதொரு மணத்தைச் செய்ததாக எண்ணக் கூடாமையால், விடியலில் பனிஅகத்துள்ள மெல்மல்லிகை படிதராது உழிதரும் பைம் சிறைவண்டு என- விடியற்காலத்தே பெய்யும் பனியினை உள்ளேயுடைய மெல்லிய மல்லிகை மலரின்கண்ணே சென்று அமர்தலைச் செய்யாது சுழன்று கொண்டிருக்கும் பசிய சிறையினையுடைய ஒரு வண்டைப்போல,தொடுதலும் விடுதலும் துணியகில்லேன் இவனைத் தொடுதலையாவது விட்டு விடுதலையாவது துணிந்து செய்யமாட்டேனாய் இருக்கின்றேன்

என்றவாறு, ஏ: அசை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/112&oldid=1580069" இலிருந்து மீள்விக்கப்பட்டது