உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் – 11 11 ✰

மறைவிற் செறிந்த காதற் பெருங்கிழமை மனக்கொளாது குறையும் நினைவாற் கொடுமனம் வல்லென்ற எனைக்குறித்துப் பிறைபோற் புருவம் முரியப் பெருவிழிகள் சிவக்கச்சினம் முறையே மிகுதல் மதன்வில் லிரண்டாய் முறித்திட்டதே.

-

L

(34)

-

(இ-ள்) மறைவில் செறிந்த -பிறர் எவரும் அறியாமல் யான் இவளைக் கூடுதற்கு ஏதுவாயிருந்த, காதல்பெரும் கிழமை பேரன்பாகிய பேர் உரிமையினை, மனக்கொளாது - என் மனதின்கட் பதியக் கொள்ளாதபடி, குறையும் நினைவால் - குறைந்துபோன நினைவால் அஃதாவது மறதியால், கொடுமனம் வல் என்ற எனைக் குறித்து நிலை கோணிய உள்ளங் கடுமையாய்ப் போன என்னை உறுத்து நோக்கி, பிறைபோல் புருவம் முரிய - பிறையைப் போற் புருவங்க ளானவை வளைய, பெரு விழிகள் சிவக்க -பெரிய கண்கள் சிவந்த நிறத்தினையடைய, சினம் முறையே மிகுதல் - கோபமானது இவட்கு நீதியாகவே அல்லது மேலுக்குமேல் மிகுவது, மதன்வில் இரண்டாய் முறித்திட்டது - காமவேள் கையிற்பிடித்த கருப்புவில்லை இரண்டுபட ஒடித்துவிட்டது என்றவாறு. ஏ: அசை.

விழுத்தக்க வேனிலுயிர் மிகுதரவே கொண்டு முழுச்செம்மை பசுமையுடன் வெண்மையெனு மூன்றுங் குழைத்திட்டா லெனவயங்கு கொழுமாவின் முகையே! தழைப்பருவ நற்குறியாத் தயங்குநையென் றறிந்தேன்.

-

-

-

(35)

(இ-ள்) விழுத்தக்க சிறப்புமிக்க, வேனில் உயிர் மிகுதரவே கொண்டு வேனிற்காலத்திற்குரிய உயிர்ப்பினை மிகும்படியாய்க் கொண்டு, முழுச்செம்மை பசுமையுடன் வெண்மை எனும் மூன்றும் - மிக்க செம்மை பசுமை வெண்மை யென்னும் மூன்று வண்ணங்களையும், குழைத்திட்டால் என ஒன்றுசேர்த்துக் கலந்து எழுதினாற்போல, வயங்கு கொழுமாவின் முகையே விளங்காநின்ற கொழுவிய மாமரத்தேன் அரும்புகள், தழைப்பருவ நல்குறியாத் தயங்குநை என்று அறிந்தேன் தழைக்கும் வேனிற்கால வருகையினை முன் அறிவிக்கும் நல்ல அடையாள மாக நீ விளங்குகின்றனை என்று அறிந்துகொண்டேன் என்றவாறு.

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/113&oldid=1580070" இலிருந்து மீள்விக்கப்பட்டது