உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

புறஞ்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை மறஞ்செய்து மதனெடுத்து வளைவில்லில் தொடுத்தல்பெறுந் திறஞ்செய்த ஐங்கணையுட் சிறப்பெய்தி மற்றவர்தம் நிறஞ்சென்று பாய்வையென நின்னையவற் கிட்டனெனால்.

-

81

(36)

(இ-ள்) புறம்சென்ற காதலரைப் பிரிந்திருக்கும் பூவையரை நம்மைவிட்டு வெளியே சென்ற கணவரைப் பிரிந்து உறைவாரான மங்கையர்மேல், மறம்செய்து - கறுவுகொண்டு, மதன் எடுத்து வளைவில்லில் - காமவேள் கையிலெடுத்து வளைக்கும் வில்லிலே, தொடுத்தல் பெறும் - தொடுக்கப்படும், திறம்செய்த ஐங்கணையுங் வலிமை செய்யும் ஐந்து மலர் அம்புகளுள், சிறப்பு எய்தி - தலைமைபெற்று, மற்று அவர்தம் - அங்ஙனம் பிரிந்துறைவாரான மங்கையருடைய, நிறம் சென்று பாய்வை என நின்னை அவற்கு இட்டனென் - மார்பிலே சென்று பாய்வாய் என வெண்ணி மாமுகையாகிய நின்னை அக் காமவேளுக்குத் தூவினேன் என்றவாறு. ஆல் : அசை.

செழுமா மரங்கள் கொழுமுகை அரும்பியும் பொன்றுகள் பெறாமை கண்டிலீர் கொல்லோ; குரவமுகிழ் நிரம்பி நெடுநா ளாகியும்

விரியா திருத்தல் தெரியிலிர் கொல்லோ;

பனிநாட் கழித்து நனிநா ளாகியுஞ் சேவலங் குயில்கள் வாய்திற வாவே: காம வேளும் புட்டிலி லெடுத்த

நாம வெங்கணை புகுத்தி

அச்சமிக் கனனென அறிகுவென் மாதே.

-

(37)

-

இ-ள்) செழுமாமரங்கள் செழுவிய மாமரங்கள், கொழுமுகை அரும்பியும் கொழுவிய மொட்டுகளை அரும்பியும், பொன் துகள் பெறாமை கண்டிலீர் கொல்லோ இன்னும் பொன் நிறமான மகரந்தப் பொடிகள் உண்டாகப் பறாததை நீங்கள் காணவில்லையா, குரவம் முகிழ்நிரம்பி நெடுநாளாகியும் குராமரங்கள் அரும்புகள் நிறைந்து நீண்டகாலமாகியும், விரியாது இருத்தல் தெரியிலிர் கொல்லோ அவை மலராக அலராதிருத்தலை நீங்கள் தெரிந்து கொள்ளவில்லையா, பனிநாள் கழித்து நனிநாள் ஆகியும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/114&oldid=1580071" இலிருந்து மீள்விக்கப்பட்டது