உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மறைமலையம் – 11

-

பனிக்காலங் கடந்துபோய் மிகுந்த காலம் ஆகியும், சேவல் அம் குயில்கள் வாய்திறவாவே ஆணாகிய அழகிய குயிற்பறவைகள் வாய்திறந்து கூவவில்லையே, காமவேளும் புட்டிலில் எடுத்த- மன்மதனுந் தனது அம்புக் கூட்டினின்றும் எடுத்த, நாமவெம்கணைபுகுத்தி - அச்சத்தைத் தருங் கொடிய அம்புகளை மீண்டும் அதன் கண்ணே நுழைத்து, அச்சம் மிக்கனன் என அறைகுவென் அச்சம் மிகுதியும் உடையனாய் இருந்தனன் என்று அறிவித்துச் சொல்கின்றேன் என்றவாறு. மாது, ஏ : அசைநிலைகள்.

-

இன்பநுகர் பொருளெல்லாம் வெறுத்து விட்டார் இனியநூல் அமைச்சரையுங் கலவார் முன்போற் கண்ணுறக்கம் இரவெல்லாம் பெறமாட் டாராய்க் கட்டில்மிசை யிங்குமங்கும் புரளு கின்றார் தன்பெரிய மனைநல்லார் பேசும் போது

தன்மையினாற் சிலசொல்லுஞ் சொல்லி னுள்ளும் பெண்ணரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லிப்

பெரிதுவரும் நாணத்தாற் கலங்கு கின்றார்.

-

(38)

யல்லாம்

(இ-ள்) இன்பம் நுகர்பொருள் எல்லாம் வெறுத்துவிட்டார் ன்பந் துய்த்தற்குரிய பொருள்களை உவர்த்துவிட்டார். இனியநூல் அமைச்சரையும் கலவார் முன்போல் சிறந்த அரசியல் நூலாராய்ச்சியில் வல்ல மந்திரிமாரையும் முன்போற் கலந்து சூழார். கண் உறக்கம் இரவெல்லாம் பெறமாட்டாராய் - கண் துயிலுதலை இராப் பொழுது முற்றும் பெறுதற்கு ஏலாதவராய், கட்டில்மிசை இங்கும் அங்கும் புரளுகின்றார் கட்டிலின்மேல் இப்பக்கத்தும் அப்பக்கத்துமாகப் புரள்கின்றார், தன் பெரிய மனை நல்லார் பேசும்போது தனது பெரிய அந்தப்புர அரண்மனைக்கண் வைகும் மாதர்கள் தன்னோடு உரையாடும்போது, தன்மையினால் சில சொல்லும் சொல்லின் உள்ளும் - அவர்பால் வைத்த அருள் காரணமாகப் பேசுஞ் சில சொற்களிலேயும், பெண் அரசி சகுந்தலையைப் பிழைத்துச் சொல்லி - மாதர்க்கு அரசியான சகுந்தலையின் பெயரைத் தன்னை மறந்து தவறுதலாகச் சொல்லிவிட்டு, பெரிதுவரும் நாணத்தால் கலங்குகின்றார் அங்ஙனந் தவறிச் சொல்லி விட்டதை உடனே அறிந்ததும்

-

L

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/115&oldid=1580072" இலிருந்து மீள்விக்கப்பட்டது