உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84

மறைமலையம் – 11

(இ-ள்) துறவி மகள்மேல் வைத்த - முனிவர் மகளாகிய சகுந்தலைமேல்வைத்த, தொல்காதல் மறைத்த மறதி எனும் இருள் பழைய காதலன்பை நினைவுகூர வொட்டாது மறைத்த மறதியாகிய இருள், நெஞ்சை மற்று அகன்ற பின்னே - என் நெஞ்சை அங்ஙனம் மறையாது விட்டு நீங்கியபின்னர், உறவருந்தும் எனைக் குறியிட்டு உலைப்பதற்கு - மிகத் துன்புறும் என்னைக் குறிவைத்து அலைப்பதற்காக, மதனன் நிறம் மாவின் முகையை வில்லில் நிறுத்துகின்றான் என்னே - காமவேள் நிறத்திற் சிறந்த மாவினது மொட்டாகிய அம்பைத் தனது வில்லின்கண் நிறுத்துகின்றனனே இனி நான் உய்யுமாறு எங்ஙனம்! என்றவாறு. கொடியேனால் நீக்குண்டு கூடுமுற வினரோடும்

படர்வதற்கென் காதலிதான் பரிவுறுங்காற் பெருந்தந்தைக் கடியாராஞ் சீடரவர் போற்பெரியர் ஆர்த்திந்த

இடமேநில் லெனவொழுகும் நீர்விழியாள் ஏங்கினளே.

-

(41)

(இ-ள்) கொடியேனால் கொடுமைமிக்க என்னால், நீக்குண்டு - நீக்கப்பட்டு, கூடும் உறவினரோடும் படர்வதற்கு தன்னொடு கூடி வந்த சுற்றத்தினரோடும் மீண்டு செல்வதற்கு, என் காதலிதான் பரிவுறுங்கால் - என் அன்புமிக்க மனையாளான சகுந்தலை துன்புற்றக்கால், பெருந்தந்தைக்கு அடியார் ஆம் சீடர் தவப்பெருமை வாய்ந்த தன் தந்தையாராகிய காசியபருக்கு அடியவராம் மாணவர், அவர்போல் பெரியவர்- காசியபரைப் போலவே தவப்பெருமை வாய்ந்தவர், ஆர்த்து - உரத்துக்கூவி, இந்த இடமே நில் என - இந்த இடத்திலேயே தங்கக் கடவாய் என்றுகூற, ஒழுகும்நீர் விழியாள் ஏங்கினள் ஒழுகாநின்ற நீரினையுடைய கண்ணினள் ஏக்கமுற்றுத் திகைத்தனள். ஏ: அசை. காரிகை தன்னையான் கலந்தி ருந்தமை

ஓரில்பொய்த் தோற்றமோ உளத்தின் மாற்றமோ சேரிய பிறவியில் திரண்ட நல்வினை சீரிய பயன்பயந் தொழிந்த செய்கையோ.

-

(42)

-

(2)- இ-ள்) காரிகை தன்னை யான் கலந்திருந்தமை அழகியாளான சகுந்தலையை யான் கூடியிருந்த நிகழ்ச்சியை, ஓரில் ஆராய்ந்து பார்ப்பின், அது பொய்த்தோற்றமோ- கானல் நீர்போற் பொய்யான தோற்றமோ, உளத்தின் மாற்றமோ - என் மனத்தின் செயலால் உண்மைக்கு மாறாகக் காணப்படுங்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/117&oldid=1580074" இலிருந்து மீள்விக்கப்பட்டது