உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

85

கனவுதானோ, சேரிய பிறவியில் திரண்ட நல்வினை - முன்னே சேர்ந்து சென்ற பழம் பிறவிகளில் ஒருங்குதொக்க நல்வினை, சீரிய பயன் பயந்து ஒழிந்த செய்கையோ - இப் பிறவியில் வந்து எனக்குச் சிறந்ததொரு பயனைத் தந்து உடனே மறைந்த செயலாகுமோ, ன்னதென்றறிகிலேன் என அரசன் கவன்றான் என்பது.

கெண்டையங் கண்ணினாள் கிளிநக விரலிடங் கொண்டுநீ சிறிதுநாள் கூடிப் பின்னதை விண்டமை தெரிந்திடல் வினைவளஞ் சிறிதுறப் பெண்டிரைப் பிரிந்தவென் பெற்றி ஒத்தியால்.

நீ

-

(43)

கண்டை

-

(இ-ள்) கெண்டைஅம் கண்ணினாள் மீனைப்போல் வடிவுஞ் செயலும் வாய்ந்த அழகிய கண்களை விரலிடம் கொண்டு யுடைய சகுந்தலையின், கிளிநக விரலிடம் கிளிமூக்குப்போற் சிவந்து விளங்காநின்ற நகத்தையுடை இரண்டாம் விரலை இருக்கும் இடமாகப் பற்றிக் கொண்டு, நீ சிறிதுநாள்கூடி நீ சில நாட்கள் அதனொடு சேர்ந்திருந்து, பின் அதை விண்டமை தெரிந்திடில் பிறகு அதனைவிட்டு நீங்கின தன்மையை ஆராய்ந்து பார்ப்பின், வினைவளம் சிறிது உற- பண்டை ஊழின் நலமானது சிறிது வரப்பெற்றமையால் அத்துணைச் சிறந்தாளை சிறந்தாளை யான் காதன் மனைவியாகச் சிலநாட்பெற்று, பெண்டிரைப் பிரிந்த - பிறகு அப்பெண்ணைப் பிரிந்துவிட்ட, என்பெற்றி ஒத்தி எனது

-

தன்மையை ஒத்திருக்கின்றாய், என்று அரசன் கணையாழியை நோக்கிக் கவன்று கூறினானென்க. ஆல் : அசை.

மெல்லிதா யழகிதாய் விளங்குநீள் விரலுடை அல்லிமென் கையைவிட் டாழ்ந்ததென் நீருளே புல்லிய அறிவிலாப் பொருளவள் நலம்பெற வல்லதன் றேழையேன் மயங்கிற் றென்னையோ

(44)

(இ-ள்) மெல்லிதாய் மென்றன்மை யுடையதாயும், அழகிதாய் - அழகினையுடையதாயும், விளங்கு நீள் விரல் உடை - விளங்காநின்ற நீண்ட ஒவ்வொரு விரலையும் உடைய, அல்லி மென்கையை விட்டு - அல்லிக்கொடிபோன்ற சகுந்தலையின் மெல்லிய கையைப்பிரிந்து, நீர் உளே ஆழ்ந்தது என் - நீரின் உள்ளே அக் கணையாழி அமிழ்ந்திப்போயது ஏன்!, புல்லிய அறிவு இலாப் பொருள் அவள் நலம் பெறவல்லது அன்று

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/118&oldid=1580075" இலிருந்து மீள்விக்கப்பட்டது