உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86

11 ✰

மறைமலையம் – 11

இழிந்த அறிவில்லாத அப்பொருள் அவளது நலத்தினை அடைதற்கு ஆற்றல் உடையது அன்று, ஏழையேன் மயங்கிற்று என்னையோ சிறிதாயினும் அறிவுடைய யான் மயங்கி

-

விட்டது யாது காரணமோ! என்றவாறு

தானே வலிவிலென் பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு நானே படத்தி லெழுதுமிந் நங்கைக்கு நன்றுசெயல் மீனே பிறழப் பெருகுமொ ராற்றை விடுத்துவெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்குமன்றே.

(45)

(இ-ள்) தானே வலிவில் என்பால்வந்த தையலைத் தள்ளிவிட்டு - டு தானாகவே வலிய என்னிடத்தே வந்த மாதினை விலக்கிவிட்டு, நானே படத்தில் எழுதும் இந் நங்கைக்கு நன்று செயல் - யானே வருந்தி ஓவியத்தில் வரையும் இம் மங்கைக்கு நல்லது செய்தலானது. மீனே பிறழப் பெருகும் ஓர் ஆற்றை விடுத்து - மீன்கள் புரளும்படியாக நீர் பெருகிச் செல்லும் ஓர் யாற்றை விட்டு விலகி, வெய்ய கானே படர்கின்ற பேய்த்தேரை வேட்டல் கடுக்கும் அன்றே - வெம்மையுடைய காட்டகத்தே பரவித் தோன்றாநின்ற கானல்நீரை ஒருமான் விரும்பிச் சென்றதை ஒக்குமன்றோ! என்றவாறு.

துணைபுண ரன்னம் மணற்பாங் கிருப்பத் தண்ணென் றொழுகும் நீர்மா லினியும், அதன் இருகரை மருங்குங் கௌரியை யீன்ற இமயம் வைகும் எழிலுடை மான்கள்

அமைதரு தூய பனிதூங் கடுக்கலும், மரவுரி ஞான்ற விரிகிளை மரநிழல் தடக்கலைக் கோட்டில் இடக்கண் டேய்க்கும்

விழைவுறு பேடை மானும்

வரைதல் வேண்டினேன் மற்றிது தெரிமோ.

(46)

-

(இ-ள்) துணை புணர் அன்னம் - தன் சோட்டொடு கூடிய அன்னப்புள், மணல்பாங்கு இருப்ப மணற் பக்கத்தே அமர்ந்திருக்க, தண் என்று ஒழுகும் நீர் மாலினியும் - குளிர்ந்து ஓடாநின்ற நீரினையுடைய மாலினி யாற்றையும், அதன் இருகரை மருங்கும் - அவ்வியாற்றின் இரண்டு கரைப் பக்கங்களிலும். கௌரியை ஈன்ற இமயம் வைகும் - உமைப் பிராட்டியைப் பெற்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/119&oldid=1580076" இலிருந்து மீள்விக்கப்பட்டது