உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

-

87

மான்கள் அமைதரு

-

இமயமலையின் கண்ணேயுள்ள, எழில் உடை தூய பனிதூங்கு அடுக்கலும் அழகு வாய்ந்த மான்கள் பொருந்தினவுந் தூய்மையான பனிக்கட்டிகள் தங்குவனவும் ஆன மலைப் பக்கங்களையும், மரவுரிஞான்ற விரிகிளை மரநிழல் - மரநார்களினால் நெய்த ஆடைகள் தொங்காநின்ற விரிந்த கிளைகளையுடைய மரங்களின் நீழலிலே, கலைத்தடக்கோட்டில் ஆண்மானின் பெரிய கொம்பிலே, இடக்கண்தேய்க்கும் தனது - டதுகட் கடையை உரைசும், விழைவுறுபேடை மானும் புணர்ச்சி வேட்கையுடைய பெண்மானையும், வரைதல் வேண்டினேன் - எழுதற்கு விரும்பினேன், இது தெரிமோ - இது தெரிவாயாக என்றவாறு, மற்று : அசைநிலை, தெரிமோ என்பதில், மோ : முன்னிலையசைச்சொல் (தொல்காப்பியம், டையியல்)

-

காம்புகாது செருகிக் கன்னமேற் றொங்கும் நரம்புடைச் சிரீடம் நான்வரை திலெனால், மழைநாள் மதியின் தழைகதிர் புரையுந் தாமரை மென்னூல் காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவெழு திலெனே.

-

(47)

-

(இ-ள்) காம்பு காது செருகிக் கன்னம்மேல் தொங்கும் நரம்புடைச்சிரீடம் நான் வரைந்திலென் காம்பு காதிலே செருகப்பெற்றுக் கன்னங்களின்மேல் தொங்காநின்ற நரம்பு களையுடைய வாகை மலரை நான் எழுதவில்லையே, மழைநாள் மதியின் தழைகதிர்புரையும் - மழை பெய்துவிட்ட நாளின்கட் டோன்றுந் திங்களின் ஒளிமிக்க கதிர்களை யொக்கும், தாமரை மெல்நூல் - தாமரைத் தண்டினின்றும் எடுத்த ஒரு மெல்லிய நூலையேனும், காமரு கொங்கைகள் நடுவே வயங்க வடிவு எழுதிலெனே - விழைவினை யுண்டாக்கும் அவடன் கொங்கை களின் நடுவிலே விளங்க அவளது வடிவத்தினை எழுதிற்றிலேனே! என்றவாறு. ஆல் : அசை.

மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகிநீ அணவுவது கருதித்தேன் பருகாமை அறியாய்.

(48)

இ-ள்) மணமலரில் வேட்கையொடு மகிழ்பேடை வைகி - மணங்கமழாநின்ற பூவின்கண்ணே நின்னை மருவலாம் என்னும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/120&oldid=1580077" இலிருந்து மீள்விக்கப்பட்டது