உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

11✰

மறைமலையம் – 11

அவாவுடன் மகிழ்ந்த பெண் வண்டானது தங்கி, நீ அணவுவது கருதித் தேன் பருகாமை அறியாய் நீ கிட்ட வருவதனை

-

எதிர்ப்பார்த்துக்கொண்டு தேன் குடியாதிருத்தலை அறியா

திருக்கின்றனை என்றவாறு.

காம வின்பம் நுகருங்காற்

கனிந்து நான்மெல் லெனச்சுவைத்த

தோமில் மரத்திற் கிள்ளாத

தூமென் றுளிரோ மிகப்பழுத்த

காமர் கொவ்வைப் பழமோஎன்

கண்ணே யனையாள் கனிந்தவிதழ்

நீமேற் றொட்டால் முண்டகமா

முகையுட் சிறையாய் நினையிடுவேன்.

(49)

-

(இ-ள்) காம இன்பம் நுகருங்கால் - காம இன்பத்தைத் துய்க்கையில், கனிந்து நான் மெல்லெனச் சுவைத்த - கனிவு காண்டு யான் மென்மையாகச் சுவைத்த, தோம்இல் மரத்தில் கிள்ளாத தூமெல்துளிரோ குற்றம் இல்லாத ஒரு மரத்தி னின்றுங் கிள்ளப்படாத அதன் தூய மெல்லிய தளிர்தானோ, மிகப் பழுத்த காமர் கொவ்வைப் பழமோ - நிரம்பவும் பழுத்த விரும்பத்தக்க கொவ்வைக் கனிதானோ, என் கண்ணே அனையாள் கனிந்த இதழ் என் இருகண்களை யொத்தவளாகிய சகுந்தலையின் கனிவு மிக்க இதழ், நீ மேல் தொட்டால் - நீ அவ்விதழைத் தொட்டால், முண்டகமாமுகையுள் சிறையாய் நினை இடுவேன் தாமரையின் பெரிய மொட்டினுள்ளே நின்னைச் சிறைப்படுத்துவேன் என்றவாறு.

ս

-

-

விழிதுயிலாமையால் விரைக னாவினும் எழிலி னாள்தனை ஏயப் பெற்றிலேன் ஒழுகுகண் ணீரினால் ஓவியத்தினும் பழியறு பாவையைப் பார்க்க கில்லேனே.

(50)

(இ-ள்) விழிதுயிலாமையால் - கண் உறங்கப் பெறாமை யால், விரை கனாவிலும் - விரைந்த நிகழ்ச்சியுடைய கனவிலா யினும், எழிலினாள்தனை - அழகியாளான சகுந்தலையை, ஏயப்பெற்றிலேன் - பொருந்தப் பெற்றேனில்லை, ஒழுகு கண்ணீரி னால் - வடியா நின்ற கண்ணீரினாற் பார்வை மறைபடுதலின்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/121&oldid=1580078" இலிருந்து மீள்விக்கப்பட்டது