உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

89

ஓவியத்தினும் - படத்தின் கண்ணும், பழி அறு பாவையைப் பார்க்க கில்லேனே - குற்றம் அற்ற பாவை போல்வாளைப் பார்க்க மாட்டாதேனாயினனே! என்க.

பிள்ளையில்லாக் கொடியேனாற் பெயப்பட்ட

எண்ணீரைப் பிதிரர் கண்டு தள்ளாத முறைப்படியே யிவன்பின்னே தகுநீரு மெள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலியெனவே கொடுப்பாரா ரெனக்கூறி யுகுங்கண் ணீரோ டள்ளியே யுண்பாராற் பலிபெறுவோர் ஐயமுற லாயிற் றந்தோ!

-

-

(51)

-

(இ-ள்) பிள்ளையில்லாக் கொடியோனால் பெயப்பட்ட எள்நீரை பிள்ளையில்லாக் கொடியவனாகிய என்னால் வார்க்கப்பட்ட எள்ளொடு கலந்த நீரை, பிதிரர் கண்டு மறுமையுலகிற் சென்ற என் மூதாதையர் பார்த்து, தள்ளாத முறைப்படியே இவன் பின்னே தகுநீரும் எள்ளுங் கூட்டிக் கொள்ளுமினோ பலி எனவே கொடுப்பார் ஆர் தவறாத நூன் முறைப்படியே இவனுக்குப் பிறகு தகுதி வாய்ந்த நீரும் எள்ளுஞ் சேர்த்து இதனை யுணவாக ஏற்றுக்கொள்வீராக வென்று கொடுப்பவர் யாருளர்? எனக்கூறி உகும் கண்ணீரோடு அள்ளியே உண்பார் - என்று சொல்லிக்கொண்டே சொரியுங் கண்ணீரோடு அப் பலியினை வாரியுண்பார்கள், பலிபெறுவோர் ஐயம் உறல் ஆயிற்று அந்தோ - யாம் இடும் உணவினைப் பெறும் மூதாதையர் என் கால்வழி யற்றுப்போமோவென்று ஐயப்படுதற்கு! இடமா யிற்றே ஐயகோ! என்றவாறு. ஆல் : அசை.

அந்தோ-யாம்

ஓங்குவரை மேலிருந் தாங்கிழி வதுபோல் ஆன்றநில வுலகந் தோன்றுவது காண்மோ!

உயர்பெரு மரங்கள் வியன்கிளை தோற்றிச்

செழுந்தழை மறைப்பினின் றொழிவதூஉங் காண்மோ!

நன்குபுல னாகா இன்புன லியாறுகள்

அகன்றுநனி கிடத்தலிற் றுலங்குதல் காண்மோ!

இவ்வியல் பதனால் எழில்கெழுஉ மிவ்வுல

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/122&oldid=1580079" இலிருந்து மீள்விக்கப்பட்டது