உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

மறைமலையம் – 11

கியாரோ வொருவன் எழச்செய்

தீங்கென் பக்கல் இயைப்பது போன்மே.

(52)

கா

(இ-ள்) ஓங்குவரை மீதிருந் தாங்கு இழிவது போல் - உயர்ந்த மலையின்மே லிருந்தபடியே கீழ் இறங்குவதுபோல ஆன்ற நில உலகம் தோன்றுவது காண்மோ அகன்ற நிலவுலகமானது தோற்றுதலைக் காண்மின்! உயர்பெருமரங்கள் வியன்கிளை தோற்றிச் செழுந்தழை மறைப்பினின்று ஒழிவதுங் காண்மோ - உயர்ந்த பெரிய மரங்கள் தம்முடைய பெரிய கிளைகளைத் தோன்றச் செய்து செழுமையான தழைகளின் மறைப்பிலிருந்து விடுபடுவதுங் காண்மின்!, நன்கு புலன் ஆ இன்புனல் யாறுகள் அகன்று நனிகிடத்தலின் துலங்குதல் காண்மோ - முதலில் நன்றாகக் கண்களுக்குத் தெரியாத இனிய நீரினையுடைய ஆறுகள் வரவரப் பெரிதும் அகன்று கிடத்த லினால் விளங்கித் தோன்றுதல் காண்மின்!, இவ்இயல்வு அதனால் எழில்கெழும் இவ்உலகு - இவ்வாறு காணப்படுந் தன்மையினாலே எழுச்சி பொருந்தும் இந் நிலவுலகத்தினை, யாரோ ஒருவன் எழச்செய்து ஈங்கு என்பக்கல் இயைப்பது போன்ம் - எவனோ ஒருவன் கீழிருந்து மேலே எழும்பும்படி செய்து இங்கே என் பக்கத்திற் சேர்ப்பதுபோற் றோன்றுகின்றது என்றவாறு. ஏ : அசை.

மாலைக் காலத்து மங்கொளி மருங்கிற் புயலரண் போலப் பொருந்தித் தெளிபொன் உருகவிட் டாலென மருவித் தோன்றிக் குணகடல் குடகடல் கழூஉவக் கிடக்கும் வளஞ்சா லிம்மலை யாதோ வுரைமோ.

(53)

(இ-ள்) மாலைக்காலத்து மங்கு ஒளி மருங்கில் - சாய்ங்கால வேளையில் மங்கலாகத் தோன்றா நின்ற ஒளியினிடத்தே, புயல் அரண் போலப் பொருந்தி - முகிலாகிய (மேகமாகிய) காவற் சுவர்போற் பொருந்தி, தெளிபொன் உருக விட்டாலென மருவித் தோன்றி - தூய பொன்னை உருக்கியோட விட்டதை யொப்பக் கீழ்பால் மேல்பால் எல்லையைத் தான் பொருந்தித் தோன்றி, அங்ஙனம் இருபால் எல்லையையுந் தான் தொடுதலால், குணகடல் குடகடல் கழுவக் கிடக்கும் - கீழ் கடலும் மேல்கடலுந் தன் அடிகளைக் கழுவும்படி கிடக்கும், (பக்கம். 124 ) வளம் சால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/123&oldid=1580080" இலிருந்து மீள்விக்கப்பட்டது