உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

91

இம்மலை யாதோ உரைமோ - வளம் மிகுந்த இந்த மலை யாது? சொல்லுவீராக என்றவாறு.

வேட்பன தரூஉங் கற்பகம் பொதுளிய அட வியிலிருந்தும் மற்றிவர் ஆர்வது நடைபெறுந் தூய வளியே; முடவிதழ்ப் பொற்றா மரையின் நற்றா துகுதலிற் பழுப்புருந் தோற்றும் விழுத்தட நீரே பொழுதுமா றாதிவர் முழுகுதீம் புனலே; வீழ்ந்தொரு குறியில் ஆழ்ந்திவ ரிருப்பதும் விளக்கம் வாய்ந்த மணிக்கன் மிசையே; அரம்பை மாதரார் மருங்குறப் பெற்றும் ஐம்பொறி யடக்குமிவர் மொய்ம்புமிகப் பெரிதே;

இந்நற் றவர்பால் மன்னுமிப் பொருள்கள்

ஏனை முனிவரும் விழைவுற்

றானது நோற்கும் அருமைசான் றனவே.

-

(54)

(இ-ள்) வேட்பன தரும் கற்பகம் பொதுளிய அடவியி லிருந்தும் - விரும்பிக் கேட்பவைகளையெல்லாங் கொடுக்குங் கற்பகமரங்கள் நிறைந்த காட்டின்கண் இருந்தும், 'மற்று' அசைநிலை; அல்லது அவைகளை ஏதும் விரும்பிக் கேளாத வராய் என்று வினைமாற்றுப் பொருள் பட உரைப்பினும் ஆம்; இவர் ஆர்வது நடைபெறும் தூயவளியே -இவர் அருந்துவதோ இயங்குகின்ற தூய்மையான காற்றாய் இருக்கின்றது, முடவு இதழ்ப் பொன்தாமரையின் நல்தாது உகுதலின் பழுப்பு உருத்தோற்றம் விழுத்தட நீரே வளைந்த இதழ்களையுடைய சம்பொன் நிறமான தாமரை மலர்களின் நல்ல துகள் சொரிதலினாலே பழுப்பான நிறத்தைக் காட்டுஞ் சிறந்த குளங்களின் நீரே, பொழுது மாறாது இவர் முழுகு தீம்புனலே - சிறு பொழுதுகள் தோறும் மாறாமல் இவர் ஆடும் இன்சுவைத் தண்ணீராயிருக்கின்றது, வீழ்ந்து ஒரு குறியில் ஆழ்ந்து இவர் இருப்பதும் விரும்பி ஓர் அடையாளத்தின்கண்ணே நினைவு பதிந்து இவர் இருப்பதற்கு இடமாவதும்; விளக்கம் வாய்ந்த மணிக்கல் மிசையே - துலக்கம் பொருந்திய இரத்தினக் கற்களின் மேலாகவே இருக்கின்றது. அரம்பை மாதரார் மருங்கு உறப்பெற்றும் - அழகின் மிக்க அரம்பை மகளிர் தம் பக்கத்தே

-

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/124&oldid=1580081" இலிருந்து மீள்விக்கப்பட்டது