உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் – 11 11

பொருந்தப் பெற்றும், ஐம்பொறி அடக்கும் இவர் மொய்ம்பு மிகப் பெரிதே - ஐம்பொறி வழிச் செல்லும் அவாவை அடக்கியிருக்கும் இவரது மனவலிமை மிகவும் பெரிதாயிருக்கின்றது, இந் நல்தவர் பால் மன்னும் இப் பொருள்கள் - இந்த நல்ல தவத்தினையுடைய முனிவரிடத்தே நிலைபெற்றிருக்கும் இவ் வரும் பொருள்கள், ஏனை முனிவரும் விழைவு உற்று ஆனாது நோற்கும் அருமை சான்றன - மற்றை முனிவர்களும் பெறுதற்கு அவாக்கொண்டு இடையறாது தவம்புரியத்தக்க அளவு அருமை மிக்கனவாய் இராநின்றன என்றவாறு. முன் நான்கு ஏகாரங்கள் - பிரிநிலைத் தேற்றம்; ஐந்தாவது ஆறாவது - தேற்றம். ‘வீழ்தல் விரும்புதற் பொருட்டாதல் “தாம் வீழ்வார் மென்றோள்”” என்புழியுங் காண்க (திருக்குறள்.1103 ) 'குறி என்றது ஒளியும், ஒளிவடிவின் அடையாளமான சிவலிங்கமும்.

L

பேதமை தன்னான் மாதைநான் நீக்கக் கண்ணின் நுண்டுளி கீழிதழ் வீழ்ந்து பெருந்துய ருறுத்திய தன்றே, இன்றே மற்றது சிறிதே வளைமயிரிறையில் உற்ற தாகலிற் பொற்கொடி அதனை அளியேன் பெருந்துயர் நீங்க

எளியேன் முந்துறத் துடைக்குவென் மயிலே

(55)

(இ-ள்) பேதமைதன்னால் - அறியாமையினால், மாதை நான் நீக்க - மங்கையாகிய நின்னை யான் விலக்கிவிட, அதனை நினைந் தெழும்-ஆற்றாமையாற் பெருகுங், கண்ணின் நுண்துளிகீழ் இதழ் வீழ்ந்து பெரும் துயர் உறுத்தியது அன்றே - கண்களின் சிறு நீர்த்துளிகள் கீழ் உதட்டின்கண்ணே விழுந்து யான் நின்னை விலக்கிய அந்நாளில் நினக்குப் பெருந் துன்பத்தை யான் விளைத்தற்கு அறிகுறியாயின வல்லவோ? இன்றே யான் நின்னைத் தலைக்கூடிய இந்நாளிலும், அற்று - அப் பிரிவினை நினைந்து பெருகும், அது சிறிதே வளைமயிர் இறையில் உற்ற தாகலின் - அக் கண்ணீர் சிறிதுளிகளாக வளைந்த மயிர்களை யுடைய இறைப்பை விளிம்பிற் றங்கியிருக்கின்றனவாதலால், பொன்கொடி பொன்னிறமான பூங்கொடியனையாய், அதனை - அக் கண்ணீர்த் துளிகளை, அளியேன் பெரும் துயர் நீங்க இரங்கத்தக்க எனது பெருந் துயரம் நீங்கும்படியாக, எளியேன்

-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/125&oldid=1580082" இலிருந்து மீள்விக்கப்பட்டது