உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

93

முந்துறத் துடைக்குவென் மயிலே - மயிலின் சாயலையுடையாய்! ஏழையேன் முன்னதாகத் துடைப்பேன் என்றவாறு.

சிறந்த மன்னவன் தண்குடிச் செல்வமே தெரிக! விறந்த கல்விசால் புலவர்சொல் வியந்திடப் படுக! நிறந்து வாழுமை கூறராம் நீலலோ கிதர்யான்

பிறந்தி டாவகை யருளிமேற் பேறுநல் குகவே.

சிறந்த

மன்னவன்

6

(56)

அறிவு

ஆண்மை

இ-ள்) நடுநிலைமையில் மிக்கோனான அரசன், தன்குடிச் செல்வமே தெரிக - தன் குடிமக்களின் வளவிய வாழ்க்கையினையே தனது வாழ்க்கையாகத் தெரிவானாக!, விறந்த கல்விசால் புலவர் சொல் வியந்திடப்படுக-செறிந்த கல்வியறிவு மிக்க புலவரின் மொழிகள் எல்லாராலும் பாராட்டப்படுக! நிறந்த வாழ் உமை கூறர் ஆம் நீலலோகிதர் - எல்லா உலகிலும் உயிரிலும் விளங்கித்தோன்றி வாழாநின்ற உமைப்பிராட்டியாரைத் தமது இடப் பாகத்தே கொண்டவரான சிவபிரான், யான் பிறந்திடாவகை அருளி மேல் பேறு நல்குக யான் மீண்டும் பிறவாதபடி அருள்செய்து அதன்மேல் தமது திருவடிப் பேற்றையும் எனக்குக் கொடுத்தருள் வாராக! என்றவாறு. ஏ : அசை; ‘பேறு' என்பதில் உம்மை தொக்கது.

-

அடிக்குறிப்பு

1. மறைத்திரு மறைமலையடிகளார் இயற்றிய 'சாகுந்தல நாடகம் பல்கலைக் கழகங்களில் பாடமாக வைக்கப் பெறுவது யாவரும் அறிவர். அந்த நாடகத்தில் இடையிடையே உரைநடையுடன் அடிகளார் வகைப் பாவினங்களில் இயற்றிய 52 செய்யுட்கள் காணப் பெறுகின்றன. அடிகளார் நாடகத்தின் பின்னிணைப்பாக எழுதப் பெற்றிருக்கும் விளக்கக் குறிப்புக்களில் அப் பாடல்களுக்கு உரை விளக்கம் காணப்பெறுகின்றது. எனவே அடிகளார் பாமணிக் கோவையில் அப் பாடல்களை உரை விளக்கத்தோடு சேர்ப்பது பொருத்தமாகுமெனச் சேர்த்திருக்கின்றோம்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/126&oldid=1580083" இலிருந்து மீள்விக்கப்பட்டது