உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

❖ 11❖ மறைமலையம் – 11

16

இரங்கற்பாக்கள் சோமசுந்தரக்காஞ்சி

பாட்டுடைத் தலைவர் வரலாறு

திருப்பெருந்திரு சோமசுந்தர நாயகரவர்கள் கி.1846 ஆம் ஆண்டு ஆகஃச்டு மாதம் 16 ஆம் நாள், சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக விளங்கும் சூளை என்னும் ஊரில் இராமலிங்கர் அம்மணியம்மாள் என்னும் நற்றவஞ் செய்த பெற்றோருக்கு அருமை மகவாகப் பிறந்தார். இவர்க்குப் பெற்றோர் வழங்கிய பிள்ளைத் திருப்பெயர் ‘அரங்கசாமி’ என்பதாகும்.

அரசினர் கல்விச் சாலையில் தெலுங்கும் ஆங்கிலமும் கற்ற இவர் 'முத்து வீரிய உபாத்தியாயர் என்னும் பெரியாரிடம் தமிழிலக்கண இலக்கியங்களும் அச்சுதானந்த அடிகள் என்னும் துறவி யார்பால் வடமொழியும் கற்றுச் சிறந்தார்.

சிவஞானம் என்னும் அம்மையாரை மணந்து இல்லறம் மேற்கெண்ட சோமசுந்தரர், செகதாம்பாள், விசாலாட்சி, லோகாம்பாள் என்னும் பெண்மணிகள் மூவரும், சிவபாதம் என்னும் ஆண் மகன் ஒருவனும் ஆக நால்வரையும் மக்கட் செல்வமாகப் பெற்றார்.

கொலைத் தொழிலால் வரும் சம்பளத்திற்காக ஊழியம் பார்த்தல் ஆகாது என்னும் உணர்வு மேலீட்டால் தோற்கிடங் கொன்றில் தாம் பார்த்துவந்த கணக்கர் வேலையைக் கை விட்டமையும், அங்ஙனமே பொய்சொல்லி விடுப்பெடுக்க வேண்டியுள்ள வேலை பார்ப்பதினும் அதனை விட்டொழித்தலே மேலென்றுகருதி நகராண்மைக் கழகத்தில் தாம் பார்த்துவந்த எழுத்தர் வேலையைக் கைவிட்டமையும் இவர் தம் உண்மை யுள்ளத்தையும் உள்ளவுறுதியையும் புலப்படுத்தும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/127&oldid=1580084" இலிருந்து மீள்விக்கப்பட்டது