உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1

பாமணிக் கோவை

95

இளமையில் மாயாவாத வேதாந்தக் கொள்கையில் சிக்குண்டிருந்த நாயகர் திருமிகு மதுரை நாயகம் என்னும் பெரியாரால் சிவநெறி மெய்ப்பொருள் நுட்பம் உணர்ந்து தெளிந்தார்.

வடமொழி இலக்கண இலக்கியங்கள், மறை நூல்கள், 'அவையங்கள், மெய்ப்பொருள் நூல்கள், தொல் கதைகள் முதலியவற்றில் சோமசுந்தரர்க்கு இருந்த ஒப்பற்ற புலமைச் சிறப்பையும் மற்றும் பாநல நாநலங்களையும், தருக்க முறையோடு வழக்கிட்டுத் தங்கோள் நிறுவும் வீறுமிக்க பேராற்றலையும் கண்டு வியந்து இராமநாதபுரத்து மன்னரான சேதுபதி அவர்கள்

66

இவர்க்குச் 2 “ சைவசித்தாந்த சண்டமாருதம் என்னும்

பட்டமும், வெற்றித் தோடாவும், பொற்குவையும் வழங்கிப் பாராட்டிச் சிறப்பெய்தினர். நாயகரவர்கள் ஒருமுறை விவேகானந்த அடிகளை வழக்குரையில் வென்று தம் மதம் நிறுவினார்.

மெய்யறிவு சான்ற சோமசுந்தரவள்ளலின் அரும்பணியால் வேற்று மதங்களினின்றும் மீண்டு, சிவநெறி தழுவியவர் பலர். தவத்திரு அச்சுதானந்த அடிகளே தம் மாணவரின் விளக்கத்தால், தாம் மேற்கொண்டிருந்த மாயாவாத வேதாந்தக் கொள்கையை யும் துறவையும் கைவிட்டுச் சிவநெறித்துறவு மேற்கொண்டு தம் பயரையும் ஏகாம்பர சிவயோகிகள் என்று மாற்றிக் கொண்டமை குறிப்பிடத் தக்கது.

"வேத பாஹ்ய சமாஜ கண்டனம்” என்னும் வழக்குரை நூலே நாயகரவர்கள் இயற்றி வெளியிட்ட முதல் நூலாகும். அப்போது அவர்கட்கு அகவை 22. பின் நாற்பதுக்கு மேற்பட்ட அரும்பெறல் நூல்களை நாயகரவர்கள் அடுத்தடுத்து இயற்றி வெளியிட்டுள்ளனர்.

.

சிவநெறி தழைக்க அரும்பணியாற்றிய இப் பெரியார் தமது 55 ஆம் அகவையில் 1901 ஆம் ஆண்டு, பிப்பிரவரி மாதம், 22 ஆம் நாள் வெள்ளிக்கிழமை யன்று சிவபெருமான் திருவடி நீழல் எய்தினர். இவர் தம் மாணாக்கர் பலருள்ளும் தலை சிறந்தவர் தவத்திரு மறைமலையடிகளாராவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/128&oldid=1580085" இலிருந்து மீள்விக்கப்பட்டது