உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

மறைமலையம் – 11

சோமசுந்தரக்காஞ்சி

தாம்மாசிரியரின் பெரும்பிரிவால் உளங் குழையப்பெற்ற அடிகளார் கையறுநிலை என்னுந் தலைப்பில் எட்டுச் செய்யுட் களும், தாபதநிலை என்னந் தலைப்பில் பத்துச் செய்யுட்களும், மன்னைக்காஞ்சி என்னுந் தலைப்பில் அறுபத்தேழு அடிகளான் அமைந்த அகவற்பா ஒன்றும் காண்ட சோமசுந்தரக்காஞ்சி என்னும் இந்நூலை இயற்றினார்.

இ ஃது அச்சியற்றப்பட்டுப் பாட்டுடைத் தலைவர்க்கு நீத்தார் கடன் நிகழ்ந்த 16 ஆம் நாள் ஆண்டுக்கூடிய பேரவையில் மற்றையோர் இயற்றிக் கொணர்ந்த இரங்கற் பாக்கள் படித்து முடிக்கப்பட்டபின் அடிகளால் கண்ணீர் ஒழுகக் கலுழ்ந்த படியாய்ப் படித்து முடிக்கப்பட்டது. ஏனையோர் பாக்கள் உண்மையில் இரங்கற்பாக்களாய் இல்லாமல் நாயகரவர்களின் மெய்ந்நூற் புலமையினையும், நாநலத்தையும் அவர்களிடம் எதிர் வழக்கிட்டுத் தோல்வியுற்றார் நிலைகளையுமே எடுத்தியம்பி நகையினை உண் ாக்கினவாக,

ன.

அடிகளார் நெஞ்சங் குழைந்துருகிப் பாடிய இக் காஞ்சிப் பாக்களோ அனைவரையும் அகங்கரைந்து கண்ணீர் பெருகி அழுமாறு செய்துவிட்ட ஆதலின் நாயகரவர்களின் மாணாக்கர், நண்பர், உறவினர், மற்றையோர் யாவராலும் இந்நூல் யாண்டும் ““பாராட்டப் பட்டது.

அடிக்குறிப்புகள்

இவர் - முத்துவீரியம் இலக்கண நூலாசிரியர்

1.

அவையங்கள் - உபநிடதங்கள்

2.

சண்டமாருதம் - சூறாவளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/129&oldid=1580086" இலிருந்து மீள்விக்கப்பட்டது