உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

97

'வைதிக சைவசித்தாந்த சண்டமாருதம்' திருப்பெருந்திரு. சோமசுந்தர நாயகரவர்கள் மேல் இயற்றிய

1. கையறுநிலை

சைவமெனப்படு சமயந லுண்மை

தழைத்து செழித்திடவோ

தாவறு நீதி வழிப்படு வாதிகள்

சார்ந்து களித்திடவோ

மெய்வழி பொய்வழி வேறுவே றாக

விரிந்து விளங்கிடவோ

வேதவே தாந்த வரம்பினி யார்க்கும் விளங்க விளம்பிடவோ

தெய்வ மினிச்சிவ மென்று தெளிந்துல கிங்கு திகழ்ந்திடவோ

திப்பிய மெய்யரு ளிப்புவி வந்து சிறந்த திறம்படவோ

துய்ய வெண்ணீறு துதைந்த தொழும்பர்க

டன்மை சுடர்ந்திடவோ

சோமசுந் ரனெனு நாமமொ டிங்குநீ

தோன்றிய தெங்குருவே.

புத்தர் கரைந்திடு பொய்ம்மொழி கீழ்ந்தது

போதுவ தன்றென்றோ

புன்சம ணுக்கொரு வன்கழு வீந்ததும்

போதுவ தன்றென்றோ

சுத்தசை வத்தொடு முரணி யிழிப்புரை

தோற்றுந ருண்டென்றோ

(1)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/130&oldid=1580087" இலிருந்து மீள்விக்கப்பட்டது