உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

❖ - மறைமலையம் – 11

சொல்வழி வாரலர் நல்வழி கண்டு

துலங்குக வின்றென்றோ

பித்துரை யாடுந ரத்திறந் தீர்ந்து

பிழைத்திட லொன்றென்றோ

பேதுரை கூறுநர் வாதுரை போழ்ந்து பிறங்குவ தின்றென்றோ தொத்தலர் கொன்றையினான்புக ழின்று

தொடங்குவது நன்றென்றோ

சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே.

வான்மதி மீனின நீங்க வழுக்கியிம் மண்ணிடை வீழ்ந்ததுவோ

மல்லலங் கற்ப மரஞ்சிவம் வீசியிம்

மண்ணிடை வீழ்ந்ததுவோ

நான்முக னான்மறை யுட்பொருள் கூற நலத்தக வந்ததுவோ

நல்லகல் லாலமர் நம்பர்கை காட்டுரை

நாட்ட வெழுந்ததுவோ

மான்மக ணாமக டூமகள் கூடி

வளந்தர வந்ததுவோ

மாதவ வாழ்வொடு மில்வினை காட்டிட வள்ளுவர் வந்ததுவோ சூன்முதிர் வண்புய னூன்முறை தந்து சுரந்திட வந்ததுவோ

சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ தோன்றிய தெங்குருவே.

நாயினிழிந்தவெம் புன்மை களைந்து நலந்தர வந்தனையோ

நல்லது தீயது நன்று பகுத்து

நவின்றிட வந்தனையோ

தாயினு மென்னுயர் தந்தையினும்முயர்

தன்மையில் வந்தனையோ

(2)

(3)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/131&oldid=1580088" இலிருந்து மீள்விக்கப்பட்டது