உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாமணிக் கோவை

தண்டமி ழிற்படு வண்டுறை நன்றுநீ தந்திட வந்தனையோ

காயினு மல்ல துவப்பினு மன்பது

காட்டிட வந்தனையோ

கன்மன மியாவுமொர் நன்மன மாயெமைக் காத்திட வந்தனையோ

தூய வுளத்தினர் சாம்பவ ரென்பது

தோற்றிட வந்தனையோ

சோமசுந் தரனெனு நாமமொ டிங்குநீ

தோன்றிய தெங்குருவே.

கண்ணுது லார்நெறி பண்ணின மொண்கழல்

காணுத மினியென்றோ

கௌணியர் தந்தலை வன்கழல் கண்டு

களிக்குது மினியென்றோ

எண்ணில ரன்பர்மு னண்ணிய நல்வழி

யேகுது மினியென்றோ

ஈசனற் றொண்டர் குழீஇயவெள் வெற்பி லிருக்குது மினியென்றோ மண்ணில் வரும்பொரு டுய்த்துறை வாழ்வு மதித்தில மினியென்றோ

மன்ன ரிறைஞ்ச வரும்பெரு வாழ்வு

மயங்கு வகைத்தென்றோ.

துண்ணென விவ்வுல கம்முத லென்று சுருங்குத லறிமென்றோ

சோமசுந் தரனெனு நாமம் விடுத்து மறைந்தனை யெங்குருவே

இங்கினி நின்கழல் கண்டிரு கண்களு

மின்புற லாகாதே

ஏழைய முய்ய மிழற்றுநி னின்னிசை

யெய்துவ தாகாதே

செங்குமு தம்புரை நின்றிரு வாய்மொழி

சேர்வது மாகாதே

99

(4)

(5)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/132&oldid=1580089" இலிருந்து மீள்விக்கப்பட்டது