உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 11.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100

மறைமலையம் – 11

செம்மை தரும்முப தேச வழக்கினித் தேர்ந்திட லாகாதே

கொங்கலர் கொன்றையினான்றிற மிங்கு

குறிப்பது மாகாதே

குன்றலி லன்பர் குணங்குறி யிங்கு குறிக்கொள லாகாதே

துங்கந லாகம நுட்ப முணர்ந்து சுகம்பெற லாகாதே

சோமசுந் தரனென நாமுரை யண்ண

றுறந்து மறைந்திடவே.

குன்றி விழிக்குயில் காளுயிரன்னவெங்

கோவினைக் கண்டனிரோ

கூம்பு சிறைக்குரு கேகுரு மாமணி கோலநீர் கண்டனிரோ

பொன்றுகள் சிந்திடு கொன்றைக ளேசிவ போதனைக் கண்டனிரோ

புந்தி நிறைந்தவர் சிந்தை விளக்கினைப் புன்னையே கண்டனிரோ

கன்று முளத்தொடு கண்கலு ழெந்துயர் கண்டுரை யாடீரோ

கைலை மலைத்தலை வன்கழல் வைகினற்

கண்டது சொல்லீரோ

துன்றுமெ மெந்தையை யென்றினிக் காண்குவந்

தோகையே கூறிரோ

சோமசுந் தரனெனு நாமனைக் கண்டு

தொடர்ந்துசொ றூதுணமே.

வேதமொ டாகம வித்தக நூல்கள்

விரிந்து விளங்கிடுமோ

வென்றவெண் ணீற்றொளி யீந்நில மெங்கும்

தீதறு நால்வர்தி றம்படு மன்பு

திகழ்ந்து சிறந்திடுமோ

தேறரு மெய்ப்பொருள் கண்டவர் நூல்க

(6)

(7)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_11.pdf/133&oldid=1580090" இலிருந்து மீள்விக்கப்பட்டது